»   »  மும்பையில் ரூ. 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பையில் ரூ. 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் ரூ.100 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படம் மற்றும் டிவி தொடரில் நடித்து வருகிறார். இது தவிர ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக பிரபல அழகுசாதன நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.

அந்த நிறுவனம் ஐஸுக்கு பதில் பிரியங்காவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம்.

மும்பை

மும்பை

பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா மும்பையில் ரூ. 100 கோடிக்கு கனவு இல்லம் வாங்கியுள்ளாராம். பிரியங்கா வாங்கியுள்ள வீடு பற்றி தான் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

நியூயார்க்

நியூயார்க்

பிரியங்கா ஹாலிவுட்டில் நடித்து வருவதால் ஹோட்டல்களில் தங்க அவருக்கு விருப்பம் இல்லை. இதனால் அவர் நியூயார்க் நகரிலும் அழகான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்

நியூயார்க் தவிர லாஸ் ஏஞ்ல்ஸ் நகரிலும் வீடு வாங்க திட்டமிட்டுள்ளாராம் பிரியங்கா. பிரியங்கா நடிப்பு தவிர பாட்டும் பாடி வருகிறார். அடுத்ததாக திருமணமா என்ற கேள்விக்கு பிரியங்காவின் தாய் பதில் அளித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

பிரியங்காவின் திருமணம் பற்றி அவரது தாய் டாக்டர் மது சோப்ரா கூறுகையில், இன்று பல திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. மக்களுக்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. பிரியங்காவுக்கு திருமண உறவை மேம்படுத்தும் நேரம் கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வார் என்றார்.

English summary
According to reports, Bollywood actress Priyanka Chopra has bought a house in Mumbai for Rs. 100 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil