»   »  40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா!

40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விளம்பரங்களின் மூலமாக 40 நாட்களில் 100 கோடிகளை நடிகை பிரியங்கா சோப்ரா சம்பாதிக்கவிருக்கிறார்.

ஹாலிவுட் சென்றபிறகு பிரியங்கா சோப்ராவின் மதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. குவாண்டிகோ சீரியலைத் தொடர்ந்து பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

Priyanka Chopra to earn 100 crores in just 40 days

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 24 விளம்பரப்படங்களில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதற்காக தொடர்ந்து 40 நாட்களை அவர் ஒதுக்கியிருக்கிறார்.

இந்த விளம்பரப் படங்களின் மூலம் பிரியங்காவிற்கு வரும் வருமானம் சுமார் 100 கோடிகள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடிகளுக்கு அதிபதியாக பிரியங்கா மாறப் போகிறார்.

ஹாலிவுட் சீரியல்+ பட வாய்ப்புகள், ஆஸ்கர் விழா, ஒபாமா விருந்து போன்ற காரணங்களால் பிரியங்கா சோப்ராவின் புகழ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதனால் பல்வேறு விளம்பரக் கம்பெனிகளும் பிரியங்காவை தங்களின் விளம்பரத் தூதுவராக நியமிக்க போட்டிபோட்டு வருகின்றன.

English summary
Sources said Bollywood Actress Priyanka Chopra to earn 100 crores in just 40 days.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil