»   »  நல்ல காலம் என்னை பிகினி போடச் சொல்லலை: நடிகை பிரியங்கா சோப்ரா

நல்ல காலம் என்னை பிகினி போடச் சொல்லலை: நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட போது பிகினி சுற்று இல்லாதது மகிழ்ச்சி அளித்ததாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். அதன் பிறகு இதுவரை ஒரு இந்திய அழகி கூட உலக அழகிப் பட்டம் பெறவில்லை.

இந்நிலையில் உலக அழகிப் போட்டி பற்றி பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார்.

பிகினி

பிகினி

1951ம் ஆண்டில் இருந்து உலக அழகிப் போட்டியில் பிகினி சுற்று உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து பிகினி சுற்று கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நல்ல வேளை நான் உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டபோது பிகினி சுற்று இல்லை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேடையில் போய்

மேடையில் போய்

பிகினி உடையில் ஹீல்ஸ் அணிந்து மேடையில் நடப்பது வினோதமானது. நீச்சல் குளம் அல்லது கடற்கரைக்கு அழைத்துச் சென்று பிகினி அணியச் செய்யுங்கள் என்றார் பிரியங்கா.

படத்தில்

படத்தில்

பிரியங்கா தோஸ்தானா படத்தில் பிகினி அணிந்து நடித்தார். அந்த புகைப்படம் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress and Miss World 2000 Priyanka Chopra says she was lucky not to have a swimsuit round during the competition as she finds it strange to walk in bikini on stage.
Please Wait while comments are loading...