»   »  ’சன்ஜீர்’ ரீமேக்கில் போலீஸ் உடையில் ஆபாசமாக நடித்ததாக பிரியங்கா சோப்ரா மீது புகார்

’சன்ஜீர்’ ரீமேக்கில் போலீஸ் உடையில் ஆபாசமாக நடித்ததாக பிரியங்கா சோப்ரா மீது புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போலீஸ் உடையை அவமானப் படுத்தியதாக சன்ஜீர் பட நாயகி பிரியங்கா சோப்ரா மற்றும் அப்படத்தின் இயக்குநர் புனீத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் ஜோடியாக நடித்த 'சன்ஜீர்' இந்திப்படம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீமேக்கில் ல் அமிதாப்பச்சன் ஏற்று நடித்த ஆவேசமான போலீஸ்காரர் வேடத்தை ராம் சரண் தேஜா ஏற்றுள்ளார். நாயகியாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப் பட்டுள்ளன. படத்தில் 100 நடன கலைஞர்களுடன் பிரியங்கா ஆடிய பாடல் ஒன்று உள்ளது. இப்பாடல் மூலம் தான் பெரிதும் பேசப்படுவோம் என பிரியங்கா நம்பி இருந்த வேளையில், ராம்சரண் தேஜாவுடன் ஆடும் மற்றொரு பாடலால் தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ளார் பிரியங்கா.

பிரியங்கா மீது புகார்....

பிரியங்கா மீது புகார்....

மகாராஷ்டிர மாநிலம் அஹமத்நகரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் கொடுத்துள்ள புகார் மனுவில், குற்றவாளிகளாக நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் இயக்குநர் புனீத் உட்பட சன்ஜீர் படக்குழுவினர் ஐந்து பேரின் பேர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை கி ஹீரோ....

மும்பை கி ஹீரோ....

சன்ஜீர் படத்தில் வரும் 'மும்பை கி ஹீரோ' பாடல் காட்சியில் ஹீரோ ராம் சரண் தேஜாவுடன் போலீஸ் உடையில் நடனமாடுகிறார் பிரியங்கா சோப்ரா. அந்தப் பாடல் காட்சியில் சிறிய கால்சட்டை அணிந்து, போலீஸ் உடை அணிந்துள்ளார் பிரியங்கா.

தேசியக் கொடி அவமதிப்பு...

தேசியக் கொடி அவமதிப்பு...

இதன் மூலம் போலீஸ் உடை அணிந்து ஆபாசமாக நடனமாடியதாகவும், தேசியக் கொடி மற்றும் போலீஸ் முத்திரைகளை தவறான முறையில் காட்டியிருப்பதாகவும் கான்ஸ்டபிள் தரப்பு குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

சம்மன்...

சம்மன்...

கான்ஸ்டபிளின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஐந்து பேருக்கும் சம்மன் வழங்க இருப்பதாகத் தெரிகிறது.

முதல் ஹிந்திப்படம்...

முதல் ஹிந்திப்படம்...

இப்படம் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவிற்கு முதல் ஹிந்திப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Priyanka Chopra could land in legal trouble after a Maharashtra Police constable from Ahmednagar filed a petition in local court accusing her of disrespecting the state police logo and the national flag and, showing police uniform in bad light.
Please Wait while comments are loading...