»   »  33 வயசானாலும் பிரியங்கா சோப்ராவோட அழகும், புகழும் இன்னும் கொறையல பாஸ்!

33 வயசானாலும் பிரியங்கா சோப்ராவோட அழகும், புகழும் இன்னும் கொறையல பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 33 வயதானாலும் இன்னும் பாலிவுட்டின் இளம் நடிகைககளுக்கு கடுமையான போட்டியாளராகவே இருந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இந்த வருடத்தில் இவர் நடித்த தில் தடக்னே தோ மற்றும் பாஜிரோ மஸ்தானி ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. இதில் பாஜிரோ மஸ்தானி வசூலில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் ஜெய் கங்காஜல் டிரெய்லர் யூடியூபில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண்களில் ஒருவர் போன்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் பிரியங்கா சோப்ரா.இந்த வருடம் பிரியங்கா சோப்ராவின் வருடம் என்று கூறுவது போல பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

தமிழன்

தமிழன்

இன்று பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் பிரியங்கா சோப்ரா முதன்முதலில் அறிமுகமானது ஒரு தமிழ்ப் படத்தில் தான். விஜய் நடிப்பில் தமிழன் என்று ஒரு படம் வெளியானது அல்லவா? அந்தப் படம் தான் பிரியங்கா சோப்ராவின் அறிமுகப் படம். அந்தப் படத்தில் 'உள்ளத்தைக் கிள்ளாதே' என்ற ஒரு பாடலையும் பிரியங்கா பாடியிருப்பார்.

பாஜிரோ மஸ்தானி

பாஜிரோ மஸ்தானி

இந்த வருடத்தில் வெளியான தில் தடக்னே தோ, பாஜிரோ மஸ்தானி ஆகிய 2 படங்களில் பிரியங்கா நடித்திருந்தார். இவற்றில் தில் தடக்னே சூப்பர்ஹிட் படமாக மாறியது. வரலாற்றுப் படமாக வெளியான பாஜிரோ மஸ்தானி வசூலில் பல்வேறு சாதனைகளைத் தற்போது புரிந்து வருகிறது. 125 கோடியில் வெளியான இப்படம் இதுவரை 200 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

குவான்டிகோ

குவான்டிகோ

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் குவான்டிகோ என்ற தொலைக்காட்சி தொடரில் பிரியங்கா சோப்ராவும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு அமெரிக்கவாசிகளையும் கவர்ந்து விட்டதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் கூறுகின்றன. ஆசிய பெண் ஒருவர் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து அந்நாட்டு பத்திரிகைகளின் செய்திகளில் இடம்பிடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

44 நாடுகளில்

44 நாடுகளில்

இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் குவான்டிகோ தொடர்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் மூலம் உலகம் முழுவதும் தற்போது புகழ்பெற்று வருகிறார் பிரியங்கா சோப்ரா.

ஜெய் கங்காஜல்

ஜெய் கங்காஜல்

இந்த வருடத்தில் பிரியங்கா சோப்ராவின் புகழை மேலும் அதிகரிக்கும் விதமான நிகழ்வு ஒன்று நேற்று நடந்திருக்கிறது. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெய் கங்காஜல் என்ற ஆக்ஷன் படத்தின் டிரெய்லர் கடந்த 22 ம் தேதி வெளியானது. இந்நிலையில் நேற்று அந்த டிரெய்லர் யூடியூபில் இந்தியர்கள் அதிகம் பார்த்து ரசித்த 6 வது டிரெய்லர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

42 லட்சத்திற்கும்

42 லட்சத்திற்கும்

வெளியான ஒரே வாரத்தில் சுமார் 42 லட்சத்திற்கும் அதிகமான பேர் ஜெய் கங்காஜல் டிரெய்லரை பார்த்து ரசித்திருக்கின்றனர். 2003ல் வெளியாகி வெற்றி பெற்ற கங்காஜல் படத்தின் 2 வது பாகமாக உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4 ம் தேதி வெளியாகிறது. அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகளுக்கு அஞ்சாத அதிரடி காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தது போல விரைவில் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றிலும் பிரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் பிரியங்கா சோப்ரா மவுனம் சாதித்து வருகிறார்.

சிரமமாக உள்ளது

சிரமமாக உள்ளது

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது "தற்போது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமாக பறந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் எதில் முதலில் நடிப்பது என்பதை தீர்மானிக்கவே சிரமமாக உள்ளது" என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

English summary
The trailer of the Priyanka Chopra starrer film Jai Gangaajal was the sixth most-viewed video on YouTube in India on Monday.Priyanka Chopra's Jai Gangaajal is all set to release on 4th March, 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil