»   »  களை கட்டும் ஆஸ்கர் விருதுகள்.. விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா தேர்வு

களை கட்டும் ஆஸ்கர் விருதுகள்.. விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு இந்த வருடம் நடைபெறப் போகும் 88 வது ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பாலிவுட்டின் தலை சிறந்த நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான குவாண்டிகோவில் நடித்து வருகிறார்.

Priyanka Chopra to Present Oscar Awards

இதில் நடித்ததற்காக அமெரிக்கர்களின் மனங்கவர்ந்த நடிகை என்ற விருது இவருக்கு சமீபத்தில் கிடைத்தது. தொடர்ந்து பாஜிரோ மஸ்தானி படத்தில் நடித்ததற்காக ஐஐஎப்ஏவின் சிறந்த துணை நடிகை விருதையும் இவர் வென்றார்.

இந்நிலையில் இவரது மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்துவது போன்று இவருக்கு மற்றொரு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 88வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறுகிறது.

இதில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 13 நட்சத்திரங்களை இந்த விருதுகளை வழங்க ஆஸ்கர் குழு தேர்ந்தெடுத்துள்ளது. அந்த 13 பேரில் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

இதனை ஆஸ்கர் விருதுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்திருக்கின்றனர். இந்த விழாவில் அவர் ஸ்டீவ் கார்வேல்,ஜே.கே.சிம்மன்ஸ் உள்ளிட்ட 12 நடிக, நடிகையருடன் கலந்து கொள்கிறார்.

இதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் ஒரே நபர் பிரியங்கா சோப்ரா என்பதால் அனைத்துதரப்பு ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இதனால் தற்போது இந்தியளவில் #priyankachopra என்னும் ஹெஷ்டேக் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

Bollywood Actress Priyanka Chopra Now Got the Opportunity for 88th Oscars Presenting Awards. Her Name Comes in the Second Slate of Presenters List.

60 words

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு இந்த வருடம் நடைபெறப் போகும் 88 வது ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 88வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறுகிறது.

இதில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 13 நட்சத்திரங்களை இந்த விருதுகளை வழங்க ஆஸ்கர் குழு தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த 13 பேரில் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

English summary
Bollywood Actress Priyanka Chopra Now Got the Opportunity for 88th Oscars Presenting Awards. Her Name Comes in the Second Slate of Presenters List.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil