»   »  3 முறை தற்கொலைக்கு முயன்றேனா?: மவுனம் கலைத்தார் நடிகை பிரியங்கா சோப்ரா

3 முறை தற்கொலைக்கு முயன்றேனா?: மவுனம் கலைத்தார் நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் போராடும் காலத்தில் தான் தற்கொலை செய்ய முயன்றதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்டபோது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் முன்னாள் மேனேஜர் ஜாஜு ட்விட்டரில் புதிய தகவலை வெளியிட்டார்.

அதாவது பிரியங்கா பாலிவுட்டில் ஜொலிக்க போராடிக் கொண்டிருந்தபோது மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார்.

பிரியங்காவின் அம்மா

பிரியங்காவின் அம்மா

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா பற்றி ஜாஜு கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து அறிந்த பிரியங்காவின் தாயோ ஜாஜுவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.

பிரியங்கா

பிரியங்கா

தான் தற்கொலைக்கு எல்லாம் முயற்சி செய்யவில்லை என்று பிரியங்கா சோப்ரா தற்போது தெரிவித்துள்ளார். ஜாஜு குற்றம்சாட்டியபோது அவர் ஹாலிவுட் டிவி தொடர் மற்றும் படத்தில் நடிக்க அமெரிக்காவில் இருந்தார்.

மீடியாக்கள்

மீடியாக்கள்

எனக்கு தொல்லை கொடுத்ததற்காக சிறையில் இருந்த ஒருவர் கூறியதை இந்திய ஊடகங்கள் அப்படியே நம்புவது வருத்தம் அளிக்கிறது. சொல்வது யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை பார்க்க வேண்டாமா. அவர் தெரிவித்த தகவலில் உண்மை இல்லை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பத்ம ஸ்ரீ

பத்ம ஸ்ரீ

பிரியங்கா சோப்ரா தற்போது ராக் நடிக்கும் பேவாட்ச் படத்தில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நாடு திரும்பிய அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Priyanka Chopra rubbished the suicidal claims made by her former manager.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil