»   »  நம்ம பிரியங்கா சோப்ராவா?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நம்ம பிரியங்கா சோப்ராவா?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சீரியலான குவாண்டிகோவில் உளவுத் துறையைச் சேர்ந்தவராக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அந்த சீரியலின் டிரைலர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கருத்துக்களை கேட்டு உள்ளார்.

டிரைலரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம் அதில் தீவிரவாதி ஒருவனுடன் காரில் அவர் உறவு வைத்துக் கொள்வது போன்று காட்சிகள் உள்ளன.

மேரி கோம் என்ற மிகச் சிறந்த படத்தில் நடித்த பிரியங்காவா இப்படி என்று பலர் கேட்டாலும் அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளது குறிப்பிடத் தக்கது. 1 கோடிக்கும் அதிகமான பேர் இந்த டிரைலரைப் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள் என்பதற்காக தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிக்க முடியாது என்ற தத்துவம் பிரியங்கா தரப்பில் இருந்து உதிர்க்கப்பட்டுள்ளது.

தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜயுடன் ஜோடியாக நடித்தவர் தான் இந்த சோப்ரா. தொடர்ந்து இந்தியில் ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Trailer Of Priyanka Chopra’s American TV Show 'Quantico'Is Out, And It Has Us OnThe Edge Of Our Seats.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil