»   »  அதுக்கெல்லாம் திராணி வேண்டும்: பாலிவுட் ஹீரோக்களை தாக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா

அதுக்கெல்லாம் திராணி வேண்டும்: பாலிவுட் ஹீரோக்களை தாக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு பாலிவுட் ஹீரோக்களுக்கு திராணி இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டிவி தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

ஹாலிவுட்டில் பிரபலமாகிவிட்ட அவர் பாலிவுட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகைகள்

நடிகைகள்

பிரியங்கா தவிர்த்து தீபிகா படுகோனே ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர்களை பொறுத்தவரையில் ஒன்று, இரண்டு பேர் தான் ஹாலிவுட் பக்கம் சென்றுள்ளனர்.

பாலிவுட் ஹீரோக்கள்

பாலிவுட் ஹீரோக்கள்

பாலிவுட் ஹீரோக்கள் யாரும் ஏன் ஹாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்யவில்லை என பிரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ஹீரோக்கள் ஹாலிவுட் செல்ல முயற்சி எடுப்பதே இல்லை என்றார்.

திராணி

திராணி

ஹாலிவுட் படங்களில் நடிக்க திராணி வேண்டும் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பாலிவுட் ஹீரோக்களுக்கு திராணி இல்லை என்று பிரியங்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருமை

பெருமை

பிரியங்கா ஹாலிவுட்டில் நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டிருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக பாலிவுட்காரர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Priyanka Chopra hinted that Bollywood heroes don't have the strength to try their luck in Hollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil