»   »  125 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக... 80 லட்சம் நகைகளுடன் ஆஸ்கரில் ஜொலித்த பிரியங்கா!

125 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக... 80 லட்சம் நகைகளுடன் ஆஸ்கரில் ஜொலித்த பிரியங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சுமார் 80 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன், நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா சார்பில் விருதுகள் அளிக்கும் நபராக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இதன் மூலம் மற்ற ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து இந்த விழாவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்தது.

மேலும் இந்த விழாவில் வெள்ளை நிறத்தினாலான கண்ணாடி உடை ஒன்றையும் பிரியங்கா அணிந்து வந்தார்.

ஆஸ்கர் 2016

ஆஸ்கர் 2016

உலகத்தில் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை அதிவிமரிசையாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் விருதுகள் வழங்குபவராக இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

வெள்ளை நிறத்தினாலான கண்ணாடி உடை ஒன்றை அணிந்து இடுப்பில் ஒரு சிறிய பெல்ட்டுடன் வந்த பிரியங்கா சோப்ரா அனைவரது கவனத்தையும் ஒருசேரக் கவர்ந்தார். சிவப்பு நிறக் கம்பள விரிப்பில் தனது மனம்கவரும் புன்னகையுடன், பிரியங்கா நடந்து வந்தபோது கேமிராக்கள் போட்டிபோட்டு அவரை மொய்த்தன.

மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்

மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்

சிறந்த படத் தொகுப்புக்கான விருதை மார்கரெட் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்) சிக்ஸெல்லுக்கு பிரியங்கா சோப்ரா வழங்கினார்.

கைகளில்

பிரியங்காவின் கைகளில் 3 வைர மோதிரங்களை அணிந்திருந்தார் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 45 லட்சங்களுக்கும் சற்று அதிகம். மேலும் அவர் காதுகளில் அணிந்து வந்த வைரத் தோடுகளின் மதிப்பு சுமார் 32 லட்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல மொத்தம் 80 லட்சம் மதிப்புள்ள நகைகளை அவர் அணிந்து நட்சத்திரங்களைப் போல மின்னினார்.

அறிமுக விழாவில்

அறிமுக விழாவில்

ஆஸ்கரில் முதன்முதலாக அடியெடுத்து வைத்த பிரியங்கா தனது நடை, உடை, பாவனைகள் மூலம் ஆஸ்கர் விழாவையே கலக்கி விட்டார். குறிப்பாக அவரின் உடையும், நகைகளும் அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

English summary
Priyanka Chopra Makes her Oscar Debut, with 80 Lakhs worth of Jewels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil