»   »  'அந்த' ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே திருமணம் செய்வேன்: நடிகை பிரியங்கா சோப்ரா

'அந்த' ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே திருமணம் செய்வேன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஒரே காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா படங்கள், விளம்பரப் படங்கள் தவிர்த்து ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். இதனால் பிரியங்கா ரொம்பவே பிசி. அண்மையில் நடந்த விருது விழாவுக்கு கூட வரவில்லை. அவருக்கு பதிலாக விருதை நடிகை தீபிகா படுகோனே வாங்கினார்.

இந்நிலையில் பிரியங்கா திருமணம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்

குழந்தைகள்

குழந்தைகள்

எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

திருமணம்

திருமணம்

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டால் அதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது. அதனால் நான் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெறுவேன்.

வைரம், பணம்

வைரம், பணம்

வைரங்கள், பணத்திற்காக நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். நான் காதலித்து தான் திருமணம் செய்வேன். குழந்தை பெறும் காரணத்தை தவிர வேறு எதற்காகவும் என் வாழ்வில் ஆண் தேவை இல்லை என்கிறார் பிரியங்கா.

காதல்

காதல்

பிரியங்கா சோப்ரா வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்று பிரியங்காவே தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Priyanka Chopra said that, she doesn't need a guy in her life except for children.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil