»   »  பட வாய்ப்புக்காக செக்ஸுக்கு அழைத்தார்கள் இயக்குனர்கள்: இளம் நடிகை பகீர் தகவல்

பட வாய்ப்புக்காக செக்ஸுக்கு அழைத்தார்கள் இயக்குனர்கள்: இளம் நடிகை பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வாய்ப்பு கொடுக்கும் சாக்கில் சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்துள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் பிரியங்கா ஜெயின். கோலி சோடா படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார். பிரியங்கா ரங்கிதரங்கா என்ற கன்னட படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடி சாண்டல்வுட்டில் அறிமுகமானார்.

இந்நிலையில் கன்னட திரையுலகம் பற்றி அவர் கூறுகையில்,

கோலி சோடா

கோலி சோடா

எனக்கு 3 கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம் வாய்ப்போடு சேர்த்து படுக்கைக்கும் அழைத்தார்கள். கோலி சோடா ரீமேக்கில் நடிக்க படுக்கைக்கு அழைக்காததால் ஒப்புக் கொண்டேன்.

மும்பை பொண்ணு

மும்பை பொண்ணு

மும்பையில் இருந்து வந்த பொண்ணு தானே படுக்கைக்கு அழைத்தால் வந்துவிடுவேன் என நினைத்து சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் செக்ஸுக்கு அழைத்தார்கள். அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை.

படத்திற்காக

படத்திற்காக

படத்தின் ஹீரோயினாக விரும்பும் மும்பை பொண்ணு எதையும் செய்வாள் என்று தவறாக நினைத்துவிட்டனர். எனக்கு பட வாய்ப்பு அளிக்க வரும்போதே தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கவும் அழைத்தார்கள்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதை எல்லாம் கேட்டு என் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைத்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை என்று அவர்களை சமாதானம் செய்தேன். என்னை நடிகையாக்கிப் பார்க்க நினைத்தார் என் தாய். ஆனால் அவருக்கு இந்த படுக்கை பிரச்சனை தெரியாது.

நல்லவர்கள்

நல்லவர்கள்

சினிமா துறையில் நல்லவர்களும் உள்ளார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அப்போது தான் ரகு ஜெயா என்னை கோலி சோடா ரீமேக் படத்தின் நாயகியாக்கினார் என்றார் பிரியங்கா. 18 வயதாகும் பிரியங்கா 16 வயதில் திரை துறைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mumbai actress Priyanka Jain has talked about casting couch in Sandalwood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil