»   »  டிராவிடை 'காதலித்த' பிரியங்கா!

டிராவிடை 'காதலித்த' பிரியங்கா!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
பாலிவுட் ஹாட் ஸ்டாரும், முன்னாள் உலக அழகியமான பிரியங்கா சோப்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிடை படு தீவிரமாக (ஒரு தலையாகத்தான்) காதலித்தாராம். இத்தகவலை அவரது பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

இந்திய கேப்டன் டோணியை, பிரியங்கா சோப்ரா வட்டமிட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் பிரியங்காவின் மனம் கவர்ந்தவர் டிராவிட்தான் என்று பிரியங்காவின் அப்பாவும், அம்மாவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பிரியங்காவின் அம்மா டாக்டர் மது சோப்ராவும், அப்பா அசோக் சோப்ராவும் அளித்துள்ள ஒரு பேட்டியில், கிரிக்கெட் என்றால் பிரியங்காவுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படி பிசியாக இருந்தாலும் டிவியில் கிரிக்கெட் போட்டியைக் காட்டி விட்டால் போதும், உடனே டிவி முன்பு உட்கார்ந்து விடுவார்.

அவருக்கு டிராவிடை ரொம்பப் பிடிக்கும். கிட்டத்தட்ட அவரைக் காதலித்தார் என்று கூடச் சொல்லலாம்.

மிமி (பிரியங்காவின் செல்லப் பெயராம்) டிராவிடை இன்னும் கூட விரும்புகிறார். அவரைக் கவர்ந்தவர் டிராவிட்தான், டோணி அல்ல. டிராவிட் பைத்தியமாக திரிவார் பிரியங்கா.

சிலர் பிரியங்காவை டோணியுடன் இணைத்துப் பேசுகிறார்கள். ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இது எத்தனையோ வதந்திகளில் ஒன்று.

பெப்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டார். அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் இருந்தனர். ஆனாலும் கூட டிராவிடை மட்டுமே பிரியங்கா சந்தித்துப் பேசினார். டோணியை அவர் பார்க்கக் கூட இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பிரியங்காவின் அம்மா மது கூறுகையில், டோணி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனது தந்தை, தாய்க்கும் அதுதான் சொந்த மாநிலம். இதை வைத்து வதந்தியைக் கிளப்பி விட்டுள்ளனர் என்று கருதுகிறேன்.

எனது தாயார் ஜோத்சனா எம்.எல்.ஏவாக இருந்தவர். தந்தை டாக்டர் எம்.கே. காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.

மேலும், டோணி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எனக்குப் பிரியங்காவைப் பிடிக்கும் என்று கூறியிருந்தார். இதை வைத்தும் வதந்தியைக் கிளப்பி விட்டிருப்பார்கள் என்றார் மது.

மது தொடர்ந்து கூறுகையில், எனது கல்யாணம் காதல் கல்யாணம்தான். அதேபோல எனது மகளின் விருப்பத்தையும் நான் மதிப்பேன். அவளுக்குப் பொருத்தமானவர் யார் என்பதை அவரே முடிவு செய்ய அனுமதிப்போம் என்றார் படு கேஷுவலாக.

பின் குறிப்பு: திராவிடுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் உண்டு.

Read more about: dravid, priyanka

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil