கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ரிலீஸ் செய்த பிரியங்கா மோகன்.. அம்மணிக்கு குசும்ப பார்த்தீங்களா

சென்னை: கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரைத்துறைகளில் படு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக மாறியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். கடைசியாக அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. திரைப்படங்கள் மட்டுமின்றி தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். Made in korea என்ற இணைய தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கிறது.

நடிகை பிரியங்கா மோகன் கன்னட திரையுலகத்தில் அறிமுகமானாலும் அவர் தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமான பிறகுதான் அடையாளப்பட்டார். அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. முக்கியாக பிரியங்காவின் அழகும், எக்ஸ்ப்ரெஷன் என அத்தனையும் க்யூட்டாக இருந்தது என்று படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Priyanka Mohan s pregnant photos are trending on social media
Photo Credit:

தமிழில் பிஸி: டாக்டர் படத்தின் வெற்றி அவருக்கு வரிசையாக வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தன. அதன்படி மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை அள்ளியது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி அசத்துகிறார்.

ஒரு பாடலுக்கும் நடனம்: ஹீரோயினாக மட்டும் நடிப்பார் என்று நினைத்திருந்த நிலையில் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமக ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவும் செய்தார். தனுஷ் தனது உறவினரை வைத்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டு இதிலும் தான் அசத்துவேன் என்று ரசிகர்களுக்கு உணர்த்தினார்.

தெலுங்கிலும் பிஸி: கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் பிஸி ஆர்ட்டிஸ்ட் அவர். நானிக்கு ஜோடியாக நடித்த சரிபோதா சனிவாரம் படம் சூப்பர் ஹிட். அதேபோல் கடைசியாக அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி படத்திலும் நடித்திருந்தார். இப்படம் சுமாரான ஹிட்டடித்திருந்தாலும் பவன் கல்யாணுடனான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதுமட்டுமின்றி படம் முழுக்க அவர் அவ்வளவு க்யூட்டாக இருந்தார் என்றும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா: திரைப்படங்களில் மட்டும் நடித்துவந்த அவர் தற்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியிருக்கிறார். அந்தவகையில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பாக மேட் இன் கொரியா என்ற வெப் சீரிஸில் கமிட்டாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஓஜி பிடத்தில் பிரியங்கா மோகன் கர்ப்பமாக இருக்கும்படி நடித்திருந்தார். அந்த கெட்டப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X