»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகை பிரியங்கா திரிவேதியை பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திரா திருமணம் செய்துகொண்டார்.

கொல்கத்தாவில் வங்காள முறைப்படி இத் திருமணம் நடந்தது.

தமிழில் ராஜ்ஜியம், காதல் சடுகுடு, ஐஸ், ராஜா ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா.

கவர்ச்சியின் எல்லைக்கேபோனவர். கன்னடத்தில் H2O என்ற படம் தயாரானபோது அதில் நடித்தார்.

பிரபுதேவாவும் நடித்த இந்தப் படம்தமிழில் காவிரி என்ற பெயரில் வெளிவந்தது.

இந்தப் படத்தில் நடித்தபோது படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான உபேந்திராவுடன் திரிவேதிக்கு காதல்ஏற்பட்டது.

இருவரும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்தபோது காதல் முற்றியது.

இதையடுத்து இருவரும் நேற்றுதிடீரென திருமணம் செய்து கொண்டனர்.

பிரியங்கா வங்காளப் பெண் என்பதால் அந்த முறையிலேயே திருமணம் நடந்தது.

அருண்குமாருடன் ஜனனம் என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்த பிரியங்கா, தெலுங்கில் இன்னும்அதிகமாகவே எக்ஸ்போஸ் செய்தார்.

இதில் ஜனனம் படம் இன்றும் வெளியாகவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil