»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

திடும் என திருமணம் செய்து கொண்டு படங்களை பாதியிலேயே தொங்கவிட்ட பிரியங்கா திரிவேதி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கிளாமருக்காகத்தான் இவரை படத்திலேயே புக் செய்தார்கள் என்ற நிலையில் இனி நான் கவர்ச்சியெல்லாம் காட்ட மாட்டேன் என்று கண்டிசன் போடுவதால் இவரை வைத்து ஜனனம் படத்தை எடுத்து வந்த தயாரிப்பாளர் மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளார்.

தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக ராஜா படத்தில் அறிமுகமாகி விக்ரமுடன் காதல் சடுகுடு, ஐஸ் போன்ற படங்களிலும் கன்னடத்தில் எச்டூஓ (தமிழில் காவிரி) படத்திலும் மிக தாராளமாக நடித்தவர் பிரியங்கா. தமிழில் ஜனனம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் கன்னட இயக்குனர் கம் ஹீரோவான உபேந்திராவை திடீரென கைப்பிடித்த பிரியங்கா நடிப்புக்கு முழுக்கு போட்டார். சிம்ரன் ஸ்டைலில் நடந்த இந்த தடாலடியால் ஜனனம் படம் தவிர சில தெலுங்கு படங்களும் பாதியிலேயே நின்று போயின.

வெறும் இரண்டு பாடல் காட்சிகள் தான் பாக்கி என்ற நிலையில் பிரியங்காவின் இந்தச் செயலால் ஏகத்துக்கும் வெறுத்துப் போனார் ஜனனம் தயாரிப்பாளர். இந்தப் படமாவது தனக்கு வாழ்வு அளிக்காதா என்று ஏக்கத்துடன் நடித்து வந்த ஹீரோ அருண்குமாருக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

பிரியங்காவின் வீட்டினரைத் தொடர்பு கொண்டு ஜனனம் தயாரிப்பாளர் பேச, மகளின் திருமணத்தால் வருமானம் பாதிக்கப்பட்ட அவரது தாயாரோ, என் மகளை மாதிரி தானே சோனியா அகர்வாலும் இருக்கா.. அவளை டூப்பா போட்டு படத்தை முடிங்க என்றாராம்.

இதை ஏற்க மறுத்த தயாரிப்பாளர், தமிழக திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தந்தார். இதையடுத்து சங்கத்தின் சார்பில் உபேந்திரா, பிரியங்காவுடன் பேச்சு நடத்தப்பட்டது.

அப்போது பிரியங்காவுக்கு விருப்பம் இருந்தால் நடிக்கட்டும் என்று உபேந்திரா ஒதுங்கிக் கொண்டார். இதையடுத்து நடிக்க முன் வந்த பிரியங்கா, சூட்டிங்தை பெங்களூர்ல தான் நடத்தனும். கவர்ச்சி எல்லாம் காட்ட மாட்டேன் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்தாராம்.

நொந்து போன தயாரிப்பாளர், வேறு இல்லாமல் நிபந்தனைகளை ஏற்க ஒப்புக் கொண்டுவிட்டாராம். விரைவில் பெங்களூரில் மறு ஜனனம் எடுக்கப் போகிறது ஜனனம் பட சூட்டிங்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil