»   »  ஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்?

ஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஹன்சிகாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க, தயாரிப்பாளர் செல்வகுமார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் வெளியாகி தோல்வியைத் தழுவிய படம் 'போக்கிரி ராஜா'. ஜீவாவின் 25 வது படமாக வெளியான இப்படத்தை 'புலி' புகழ் செல்வகுமார் தயாரித்திருந்தார்.

Producer Complaint Against Hansika

இப்படத்தின் பிரஸ் மீட்டுக்கு வருவதாக கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் '' போக்கிரி ராஜா பிரஸ் மீட்டுக்கு வருவதாக உறுதி கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பயணம் மற்றும் அவரின் தங்குமிடம் போன்றவற்றிற்கு மட்டும் சில லட்சங்களை செலவழித்து இருக்கிறேன். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால் ஹன்சிகா தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் நான் செலவு செய்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என போலீசில் ஹன்சிகா மீது புகார் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

'போகன்' தவிர வேறு தமிழ்ப்படங்கள் எதுவும் ஹன்சிகா கைவசம் இல்லாததால், தற்போது அவரின் கவனம் தெலுங்குத் திரையுலகின் மீது பதிந்திருக்கிறது.

English summary
Sources said Pokkiri Raja Producer Selvakumar to file a Police Complaint against Hansika.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil