»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு?

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு குஷ்புவை அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் தானே போட்டியிடுகிறார் விஷால். இந்நிலையில் தேர்தலில் எந்த பதவிக்கும் நிற்கவில்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தனது அணி சார்பில் நடிகை குஷ்புவை நிற்க வைப்பதாக விஷால் அறிவித்தார்.

குஷ்புவும் தேர்தல் குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.

விஷால்

விஷால்

கடைசி நேரத்தில் தலைவர் பதவிக்கு தானே நிற்பதாகக் கூறி அவசர அவசரமாக வேட்புமனுவையும் தாக்கல் செய்தார் விஷால். இதையடுத்து குஷ்பு பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்பட்டது.

குஷ்பு

குஷ்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார். தன்னால் 100 சதவீதம் நேரத்தை ஒதுக்க முடியாது என்று காரணம் கூறியுள்ளார்.

முடியும்

முடியும்

முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக குஷ்பு அறிவித்தபோது அரசியலில் இருந்து கொண்டு நேரம் இருக்குமா என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் கேட்டார். நேரம் எல்லாம் இருக்கிறது, அரசியலையும், சங்கத்தையும் சமாளிப்பேன் என குஷ்பு தெரிவித்தார்.

முடிவு

முடிவு

முன்பு நேரம் இருக்கிறது என்று கூறிய குஷ்பு தற்போது நேரம் இல்லை என்று கூறியுள்ளார். விஷாலின் முடிவால் அதிருப்தி அடைந்து குஷ்பு இப்படி கூறியுள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Actress cum politician Khushbu who earlier said that she has time for both politics and producers council election has changed her stand now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil