»   »  நடிகைகள் பற்றிய ரசிகர்கள் கண்ணோட்டம் மாற வேண்டும்!- சமந்தா

நடிகைகள் பற்றிய ரசிகர்கள் கண்ணோட்டம் மாற வேண்டும்!- சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கதாநாயகிகள் என்றாலே பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்ற கண்ணோட்டம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இது மாற வேண்டும், என்று நடிகை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் சமந்தா, முன்பு போல அதிக படங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்க்க ஆரம்பித்துள்ளார். பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் ஒப்புக் கொள்கிறார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

காரணம் கேட்டபோது அவர் இப்படிக் கூறுகிறார்:

‘கதாநாயகிகள் என்றாலே பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மக்கள் ஒரு தவறான கணிப்பு வைத்திருப்பதை அறிய முடிகிறது. பணத்தில் மட்டுமே அவர்களின் முழுக் கவனமும் இருக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒரு படத்துக்கு நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கண்ணோட்டம் மாற வேண்டும்

கண்ணோட்டம் மாற வேண்டும்

இந்த கண்ணோட்டம் மாற வேண்டும். பணம் இருந்தால் எல்லா வசதிகளும் வந்து விடும். ஆனால் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது.

தேவையான பணம் இருக்கிறது

தேவையான பணம் இருக்கிறது

சினிமாவில் நடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் என்னை பொருத்தவரை நான் பணத்துக்காக மட்டும் நடிப்பதில்லை. என்னிடம் தேவையான அளவு பணம் இருக்கிறது.

இதற்கு மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும், கட்டு கட்டாக பீரோவில் பணத்தை அடுக்கி வைக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இல்லை.

தொழில் திருப்தி

தொழில் திருப்தி

இந்த பச்சை நோட்டுக்கள் மீது எனக்கு எந்த காதலும் இல்லை. நடிப்புத் தொழில் பணத்தை மட்டுமே கொடுக்காமல் திருப்தியையும் கொடுக்க வேண்டும். அதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கும். இந்த பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது.

நல்ல கதாபாத்திரம்

நல்ல கதாபாத்திரம்

எனக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கிறது. பணம் இரண்டாம்பட்சம்தான்!''

    English summary
    Actress Samantha says that the mentality of public on an actress should me changed.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil