»   »  தாய்லாந்து புலி கோவிலில் இருக்கோம்... 'புலி' ஸ்ருதி அப்டேட்

தாய்லாந்து புலி கோவிலில் இருக்கோம்... 'புலி' ஸ்ருதி அப்டேட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி படத்திற்காக நாங்க தாய்லாந்தில் இருக்கோம். அதுவும் புலி கோவிலுக்கு முன்னாடி சூட்டிங் சூப்பரா முடிஞ்சிருக்கு என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் அப்படத்தின் கதாநாயகி ஸ்ருதிஹாசன்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தலக்கோணம் அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடைபெற்றது.

தாய்லாந்தில் படப்பிடிப்பு

தாய்லாந்தில் படப்பிடிப்பு

இதையடுத்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் புலி படக்குழு முகாமிட்டிருந்தது. தற்போது புலி பட சூட்டிங் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூட்டிங் முடிஞ்சு போச்சு

இதை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

புலி கோவில் முன்னாடி

புலி கோவில் முன்னாடி

தாய்லாந்தில் புகழ்பெற்ற புலி கோவில் முன் மங்களகரமாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று உற்சாகமாக பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

விநாயகர் சதுர்த்தி நாளில்

விநாயகர் சதுர்த்தி நாளில்

படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் செப்டம்பர் 17ல் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
“Puli” Movie shooting end in front of the Tiger Temple says Sruthihassan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil