Don't Miss!
- News
சொந்தமாக 140 கார்கள்.. கோடீஸ்வர அமைச்சர்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே பலி.. யார் இந்த நபா கிஷோர் தாஸ்?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
குடித்து விட்டு ஆட்டம் போட்ட பிரபல நடிகை...விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பியூட்டி குயின் ரைசா வில்சன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.
தனது அசரவைக்கும் அழகால் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக வலம் வரும் நடிகை ரைசா வில்சன் தமிழில் வெளியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
எப்போதும் க்யூட்டாக காணப்படும் ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல லட்சம் ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் ஒரு இளம் நடிகையாக வலம் வருகிறார்.

ரியாலிட்டி ஷோவில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர் ரைசா வில்சன். அந்த நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வலம் வந்து இளசுகளை தன் பக்கம் வளைத்து போட்டார். இந்த நிகழ்ச்சியில் இவரின் பியூட்டியைப் பார்த்து சொக்கிப்போன பாய்ஸின் ஓட்டுகள் மொத்தமும் ரைசா வில்சனுக்குத்தான் விழுந்தன. இளசுகளில் தயவால் ரைசா பிக் பாஸ் வீட்டில் 65 நாட்கள் இருந்தார்.

பியர் பிரேமா காதல்
பெங்களூருவை சேர்ந்த ரைசா வில்சன் தமிழில் வி.ஐ.பி 2 திரைப்படத்தில் காஜலின் உதவியாளராக நடித்திருந்தார். இதையடுத்து, ஹரிஷ் கல்யாணனுடன் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். லிவிங் டூ கெதர் வாழ்க்கை பற்றி சொன்ன இந்த படம், இந்த காலத்து 2K கிட்ஸ்களுக்கு பிடித்து போக, கல்லூரி மாணவிகளின் கூட்டம் திரையரங்கில் அலைபோதியது, இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

படங்களில் பிஸி
பியர் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் கேமிஸ்ட்ரி ஒத்துப்போக, மீண்டும் அவருடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு மக்களிடம் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, வர்மா, எஃப்.ஐ.ஆர், காஃபி வித் காதல், பொய்க்கால் குதிரை போன்ற படத்தில் நடித்தார். தற்போது, தி சேஸ், ஆலிஸ், கருங்காப்பியம், லவ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பார்ட்டியில் குடித்துவிட்டு ஆட்டம்
தனது சொக்கவைக்கும் அழகால் ரசிகர்களை எப்பொழுதும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரைசா வில்சன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் தினம் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார். ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பார்ட்டியில் அரைகுறை ஆடையில் குடித்துவிட்டு ஆடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் ச்சீ என்ன ரைசா இதெல்லாம் என கண்டபடி விளாசினார்கள்.

சோக கீதம் பாடும் பேன்ஸ்
ரைசா வில்சன் நடித்து அண்மையில் வெளியான காஃபி வித் காதல் படத்தின் பார்ட்டி பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவைத் தான் ரைசா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும், ரசிகர்கள் பலர், அய்யோ விஷயம் தெரியாமல் செல்லத்தை திட்டிவிட்டோமே என ரசிகர்கள் சோக கீதம் பாடி வருகின்றனர்.