»   »  ஒண்ணு ரெண்டுல்ல... 50 பேய்களுடன் மோதும் ராய் லட்சுமி!!

ஒண்ணு ரெண்டுல்ல... 50 பேய்களுடன் மோதும் ராய் லட்சுமி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் பேய்கள் சிங்கிளாக வந்து பயமுறுத்தின. இப்போதோ கூட்டம் கூட்டமாக வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றன.

சவுகார்பேட்டை படத்தில் 50 பேய்கள் இடம்பெறுகின்றனவாம். இவற்றோடு நடிகர் ஸ்ரீகாந்தும், நாயகி ராய் லட்சுமியும் முட்டி மோதி ஜெயிப்பதுதான் கதையாம்.

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம்தான் சவுகார்பேட்டை.

கோவை சரளா

கோவை சரளா

ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமியுடன் வடிவுக்கரசி, சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய், ரேகா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

வடிவுடையான்

வடிவுடையான்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். படத்தைப் பற்றி வடிவுடையானிடம் கேட்டோம்.

"சவுகார்பேட்டை படம் இதுவரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூலக் கொத்தலம் சுடுகாட்டில் 50 பேய்கள்

மூலக் கொத்தலம் சுடுகாட்டில் 50 பேய்கள்

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக மூலகொத்தலம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இருவரும் ஐம்பது பேய்களுடன் அதிரடியாக மோதும் படு பயங்கர சண்டைக்காட்சி படமாகிறது.

எட்டு காமிராக்கள்

எட்டு காமிராக்கள்

எட்டு காமிராக்கள் கொண்டு பத்து நாட்கள் இந்த சண்டைக் காட்சியை கணல் கண்ணன் படமாக்குகிறார். அதிரடியான பேய் படமாக சவுகார்பேட்டை உருவாகிக் கொண்டிருக்கிறது," என்றார்.

English summary
In a scene, Srikanth - Raai Lakshmi have fighting with 50 ghosts for Sowcarpettai movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil