»   »  ஜூலி 2: பர்பெக்ட் பிகினிக்காக 10 கிலோவைக் குறைத்த ராய் லட்சுமி!

ஜூலி 2: பர்பெக்ட் பிகினிக்காக 10 கிலோவைக் குறைத்த ராய் லட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிகினி உடையில் சிறப்பாகத் தோற்றமளிக்க தனது எடையில் 10 கிலோவை நடிகை ராய் லட்சுமி குறைத்திருக்கிறார்.

தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி இந்த 10 வருடங்களில் 50 படங்களைத் தொட்டிருக்கிறார். தற்போது ராய் லட்சுமி நடித்து வரும் ஜூலி 2 அவருக்கு 50 வது படமாக அமைந்திருக்கிறது.

Raai Laxmi Loss 10 kg for Julie 2

ஜூலி 2 வின் மூலம் பாலிவுட்டிலும் இவர் கால் பதித்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராய் லட்சுமி ''ஜூலி 2 படத்தில் இடம்பெறும் பிகினி காட்சிகளுக்காக 2 மாதங்களில் 10 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்.

இப்படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஜூலி 2 வின் 3 வது கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறவுள்ளது.

சில கஷ்டமான காட்சிகளை ராஜஸ்தான் மாநிலத்தில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இது என்னுடைய முதல் பாலிவுட்+ 50 வது படமென்பதால் தற்போது இப்படத்தில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.

இதுதவிர மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒத்துக் கொண்டுள்ளேன். இப்படம் முடிந்த பின்னரே வேறு புதிய படத்தி நடிப்பது குறித்து முடிவு செய்வேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற ராய் லட்சுமியின் டாப்லெஸ் போஸ்கள் பாலிவுட்டை அதிரடித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Raai Laxmi Loss 10 kg for her Upcoming Bollywood movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil