»   »  மொட்ட சிவா கெட்ட சிவா: லாரன்ஸுக்காக குத்தாட்டம் போடும் ராய் லட்சுமி

மொட்ட சிவா கெட்ட சிவா: லாரன்ஸுக்காக குத்தாட்டம் போடும் ராய் லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு நடனம் ஆடவிருக்கிறார்.

'காஞ்சனா' படத்தில் 'கருப்புப்பேரழகா' என்று லாரன்ஸுடன் ஆடிப்பாடி அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராய் லட்சுமி. தொடர்ந்து 'அரண்மனை', 'மங்காத்தா' போன்ற வெற்றிப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.


Raai Laxmi Peppy Dance in Motta Siva Ketta Siva

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு பாலிவுட் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்ட தற்போது 'ஜூலி 2', 'அகிரா' போன்ற இந்திப்படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.


இதுகுறித்து அவர் '' 'காஞ்சனா' படத்திற்குப்பின் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்குப் படங்களில் நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன்.


ஆனால் தமிழில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதல்முறை. மே 2 வது வாரத்தில் இப்பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்று கூறியிருக்கிறார்.


கடைசியாக 'சர்தார் கப்பர் சிங்' படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

English summary
After Kanchana Raai Laxmi Dance Again Join Hands with Raghava Lawrence for Motta Siva Ketta Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil