»   »  படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல்

படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

ராய் லட்சுமிக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்.

திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

சினிமா

சினிமா

அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்படவே இல்லை.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். சிலர் சினிமாவுக்கு வருவதே சூதாட, ஜாலியாக இருக்க, நடிகைகளுடன் படுக்க தான். அவர்களால் தான் சினிமாவின் பெயர் கெடுகிறது.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் படம் எடுப்பவர்கள் நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்து தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொண்டால் அவர்களின் படைப்பில் ஏதாவது தாக்கம் இருக்குமா?

பிரபலங்கள்

பிரபலங்கள்

இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் பிரபலமான நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கவும் செய்கிறார்கள் என்கிறார் ராய் லட்சுமி.

English summary
Raai Laxmi said that casting couch does exist in all industries. Artistes get thrown out of projects if they don't sleep with the film makers, she added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil