அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்… அசத்திய ராஷி கண்ணா !

சென்னை : பாலூட்டி, சீராட்டி, அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்க்கும் அன்னையின் சிறப்புகளை, நினைவு கூர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8ந் தேதி 'அன்னையர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

தன் குழந்தைகளுக்காக ஒவ்வொரு நொடியும் தன்னை தியாகம் செய்யும் ஓர் நடமாடும் தெய்வம் தான் தாய். இந்த நாளில் பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நாளில், நடிகை ராஷி கண்ணா தனது அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளார்.

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவர் இந்தியில் மெட்ராஸ் கபே படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சினிமாவில் ராஷி கண்ணாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், டாப் நடிகை ரேஞ்சுக்கு பிரபலமான நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலே எக்கசக்க ரசிகர்களுக்கு பேவரைட் நடிகையாக மாறினார்.

பல படங்களில் பிஸி

பல படங்களில் பிஸி

ராஷிகண்ணா தற்போது, அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது கார்த்திக்குடன் சர்தார், படத்திலும் தனுஷூடன் திருச்சிற்றம்பலம் படங்களிலும் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. தற்போது அஜய் தேவ்கனுடன் ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிஃப்ட்

கிஃப்ட்

இந்நிலையில், நடிகை ராஷி கண்ணா, அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுக்கு ஆச்சரியமான கிஃப்ட் ஒன்றை அளித்துள்ளார். அந்த காஸ்ட்லி கிஃப்ட், பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார். இதன் மதிப்பு ரூ.1.40 கோடி என்று கூறப்படுகிறது. சொகுசு கார் வாங்க வேண்டும் என்ற அம்மாவின் நீண்ட நாள் விருப்பத்தை நடிகை ராஷி கண்ணா நிறைவேற்றி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X