கூலியில் பேக்கு ப்ரீத்தி.. ஸ்ருதிஹாசனுக்கு இத்தனை கோடியா?.. ’ரோலக்ஸ்’ ரச்சிதா ராம் சம்பளம் இவ்ளோ கம்மியா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்த நித்யா ராமின் சகோதரி தான் கூலி படத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்றே ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு டிரெண்டாகி வருகிறார். கன்னடத்தில் மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த இவர், கிச்சா சுதீப், தர்ஷன் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு பக்கம் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி அமர்க்களப்படுத்தி வரும் நிலையில், ரச்சிதா ராம் இந்த படத்தில் நடித்த காட்சிகளை அவரது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஷேர் செய்துள்ளார்.

ரோலக்ஸ் படத்தில் எப்படி சூர்யாவின் ரத்தம் தெறிக்க தெறிக்க நடித்த காட்சிக்கு மேக்கப் போட்ட போட்டோக்கள் வெளியானதோ அதே போல ரச்சிதா ராமும் ரோலக்ஸ் போல மிரட்டுகிறார். ஆனால், அப்படியொரு தெறி பர்ஃபார்மன்ஸை கொடுத்தவருக்கு கிடைத்த சம்பளம் தான் ரொம்ப கம்மி என தகவல்கள் கசிந்துள்ளன.
கூலி பாக்ஸ் ஆபீஸ்: இந்தியாவில் அதிரடியாக 4 நாட்களில் 193 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் உலகளவில் 375 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல் 4 நாட்களில் 370 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், கூலி அபார சாதனை படைத்துள்ளது என்கின்றனர். 600 கோடிக்கும் அதிகமான வசூலை கூலி 2வது வார முடிவில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேக்கு ப்ரீத்தி: கூலி படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு சூப்பரான ரோல் என சொல்லப்பட்ட நிலையில், தனக்கு கொடுக்கப்பட்ட ப்ரீத்தி கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், லோகேஷ் கனகராஜ் தான் அவருக்கு பேக்கு ப்ரீத்தி கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. ரயிலில் ப்ரீத்தியை காப்பாற்ற அத்தனை பேர் முயற்சி செய்வார்கள். ஆனால், இவரோ ஒரு ஸ்டெப் கூட தப்பிக்க முயற்சிக்கவே மாட்டார் என்றும் ரஜினிகாந்த் காப்பாற்றிய பின்னரும், ரோட்டு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்து செளபினிடம் சிக்கிக் கொண்டாரே, அட்லீஸ்ட் அந்த கார் கண்ணாடியையாவது ப்ரீத்தி ஏற்றியிருந்தால் கூட செளபின் உள்ளே வந்திருக்க மாட்டார் என்று ஓட்டி வருகின்றனர்.
ஸ்ருதிஹாசன் சம்பளம்: பிரபாஸின் சலார் படத்தில் என்ன கதாபாத்திரமோ அதே ரோல் தான் இந்த படத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு என பங்கம் செய்து வருகின்றனர். ஆனால், லீடு ஹீரோயின் என்பதால் அவருக்கு இந்த படத்தில் 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரச்சிதா ராம் சம்பளம்: ஆனால், அதே நேரத்தில் கூலி படத்திலேயே செளபின் சாஹீருக்குப் பிறகு கன்னட நடிகை ரச்சிதா ராம் தான் திடீரென ஏஜன்ட் டீனா போல அதிரடி பர்ஃபார்மன்ஸை கொடுத்து கடைசியில் கொலை எல்லாம் செய்து ரோலக்ஸ் போல தெறிக்கவிட்டு இந்தளவுக்கு படம் வசூல் செய்ய காரணமாக இருந்தார். ஆனால், அவருக்கு மொத்தமே 75 லட்சம் தான் சம்பளம் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. ரச்சிதா ராமின் கூலி படக் காட்சிகளையும் மேக்கப் வீடியோவையும் அவரது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கீர்த்தி ராம் வெளியிட்டுள்ளார். தமிழில் ரச்சிதா ராமுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











