கைகள் முழுக்க மருதாணி.. Fire ரச்சிதா மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. கலக்குறாங்க.. என்ன ஃபங்ஷன்?

சென்னை: சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு; பிறகு ஃபயர் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அதீத கவர்ச்சியை காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் இருக்கும் சேனல்களில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது. அனைவரது இல்லங்களிலும் அவர் கொண்டாடப்பட்டார்.

திருமணம் டூ பிரிவு: இதற்கிடையே பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை தினேஷ் எடுத்தாலும்; ரச்சிதான் அதற்கு ஒத்துவரவில்லை.

Rachitha Mahalakshmi s Shares Her Latest Photos In Instagram
Photo Credit:

பிக்பாஸ் 6ல் ரச்சிதா: இது ஒருபக்கம் இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். ஆனால் பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அவர் பாதியில் வீட்டை விட்டு வெளியேறினாலும் அவருக்கு கிடைக்க வேண்டிய பிரபல்யம் கிடைத்துவிட்டது என்பதுதான் உண்மை.

படங்களில் பிஸி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா Fire என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். ஃபயர் படம் ஹிட்டாகவில்லை என்றாலும்; ரச்சிதா மகாலட்சுமி ஒரு பாடலில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்ததும்; மற்ற நடிகைகளின் கவர்ச்சியும் அப்படத்துக்கு விளம்பரத்தை தேடி கொடுத்தது.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: அப்படத்துக்கு பிறகு எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும்; பெரிதாக வாய்ப்புகள் எதுவும் ரச்சிதாவுக்கு இல்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. தனது கைகள் முழுவதும் மருதாணி போட்டபடி ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் அவர் என்ன விசேஷம் நடந்தது என்பதை கூறவில்லை. இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X