»   »  ராதிகாவின் ஆடை தள்ளுபடி

ராதிகாவின் ஆடை தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

ஆடிக் கழிவு ரேஞ்சுக்கு டிரஸ் விஷயத்தில் தள்ளுபடி செய்யத் துணிந்ததன் மூலம் புதிதாக ஒரு பட வாய்ப்பைப்பெற்றுள்ளார் குட்டி ராதிகா.

வித்தியாசமான கதையம்சம், கண் கவரும் லொகேஷன்கள், அருமையான ஒளிப்பதிவு, திறமையான இயக்கம்இவற்றுடன் வெளிவந்த இயற்கை படம் பலரது பாராட்டை பெற்றது. இறுதியில் தேசிய விருதும் தேடி வந்துபடத்தின் சிறப்பை உணர்த்தியது. ஆனால் வசூல் விஷயத்தில் பார்த்தால் படம் ரொம்ப வீக்.

அதனால் தானோ என்னவோ, படத்தின் இயக்குனர் ஜெகந்நாதனுக்கும், இந்தப் படத்தை பெரிதாக எதிர்பார்த்தஅருண்குமாருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அர்ஜூன் மாதிரிஏதாவது ஒரு பட வாய்ப்பை கையில் வைத்திருப்பவர் நடிகர் ஷாம்.

வசூல்ரீதியாக இயற்கை படத்தின் தோல்வி இவரைப் பாதிக்கவில்லை. உள்ளம் கேட்குமே படத்தில் நடித்துக்கொண்டிருந்தவர் அதை முடித்து விட்டு, கிரிவலம், காலேஜ் டேஸ் படங்களில் நடித்து வருகிறார். ஆனால்,இயற்கையில் கதாநாயகியாக நடித்த குட்டி ராதிகா பட வாய்ப்புகளுக்காக, வேதாளத்தைப் பிடிக்கும்விக்ரமாதித்தன் ரேஞ்சுக்கு முயற்சித்து வருகிறார்.

வர்ணஜாலம் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார். படமும் ஓடவில்லை. இவரது கேரக்டரும்பேசப்படவில்லை. சரி, அடுத்த ஏதாவது ஒரு வாய்ப்பு வருமா என்று ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு ரமணா என்றபுதுமுகத்துக்கு ஜோடியாக மீசை மாதவன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பட சூட்டிங் ஆரம்பித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. வாரம் ஒரு முறை பட ஸ்டில்தான் வருகிறதேயொழிய, படம் வருகிற வழியைக் காணோம்.

இதை நம்பிக் கொண்டிருந்தால், சினிமா வாழ்க்கை அதோ கதிதான் என்ற முடிவுக்கு வந்தவர், சென்னைவெயிலுக்கு ஏற்றபடி காற்றோற்றமாக டிரஸ் போடத் தயார் என்று அறிவித்து, தயாரிப்பாளர்களுக்கும்இயக்குனர்களுக்கும் அதை போன் போட்டும் சொல்லி வருகிறார்.

கூடவே கோடம்பாக்கம் மேனேஜர் ஒருவரின் உதவியோடு பிரபல நடிகர்கள், இயக்குனர்களின் விவரம், ஆசை,அபிலாஷைகள் அடங்கிய சின்ன டைரியையும் தயாரித்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு சோப்பு போடுவதன்மூலம் வாய்ப்புகளைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

குட்டி ராதிகாவின் இந்தப் பிரம்மப் பிரயத்தனத்துக்கு பலன் கிடைத்துள்ளது. புகழேந்தி இயக்கத்தில் உருவாகும்உள்ளக் கடத்தல் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க குட்டி ராதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil