»   »  அனுராக் காஷ்யப்பின் அடுத்த படத்தில்... ஓரினச் சேர்க்கையாளராக ராதிகா ஆப்தே?

அனுராக் காஷ்யப்பின் அடுத்த படத்தில்... ஓரினச் சேர்க்கையாளராக ராதிகா ஆப்தே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் மூலம் நாயகியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை ராதிகா ஆப்தே, தனது அடுத்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கப் போகிறாராம்.

முதலில் சர்ச்சை வீடியோ பின்பு ஆபாச வீடியோ என வரிசையான சர்ச்சைகளால் தன்னைக் கவனிக்க வைத்த ராதிகா ஆப்தே, பின்னர் அகல்யா என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடிப்பதன் மூலம் முன்னணி நடிகைகளுக்கு சமமான நடிகையாக மாறியிருக்கும் ராதிகா ஆப்தே, அடுத்தததாக தான் நடிக்கப் போகும் படத்தின் மூலம் மீண்டும் சர்ச்சைப் பாதையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

அழகுராஜா

அழகுராஜா

தமிழில் நடிகர் கார்த்தியின் அழகுராஜா படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்த ராதிகா ஆப்தேவிற்கு அடுத்தபடியாக தமிழில் சொல்லிக் கொள்ளும் படங்கள் எதுவும் இல்லை.

கபாலி நாயகி

கபாலி நாயகி

அகல்யா குறும்படத்தில் ராதிகா ஆப்தேவின் நடிப்பு பாராட்டப்பட ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இந்திய அளவில் முன்னணி நடிகைகளுக்கு இணையான புகழைப் பெற்றிருக்கிறார் ராதிகா ஆப்தே.

சர்ச்சைக்குப் பெயர்போன

சர்ச்சைக்குப் பெயர்போன

இந்நிலையில் ராதிகா ஆப்தே ஹிந்தியில் சர்ச்சைக்குப் பெயர்போன இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் வரவிருக்கிறார். படத்தின் கதைதான் தற்போதைய பரபரப்புச் செய்தியாக திரையுலகில் மாறியிருக்கிறது. கதைப்படி ராதிகா ஆப்தே ஓரினச்சேர்க்கையாளராம். இப்போதைய நிலவரப்படி ஓரினச்சேர்க்கை அதன் சவால்கள், பின்னணி எனக் கதை நகரவிருக்கிறது.

ராதிகா ஆப்தேவுக்கு ஜோடி யார்?

ராதிகா ஆப்தேவுக்கு ஜோடி யார்?

ராதிகாஆப்தேவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை யார் என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக திரையுலகினர் மத்தியில் உருவெடுத்துள்ளது. இதற்காக மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா, இன்னும் சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஆந்திராவில் இதே மாதிரி

ஆந்திராவில் இதே மாதிரி

ஏற்கனவே இந்தியாவில் ‘ஃபைர்' என்ற ஓரினச்சேர்க்கை படம் வெளியாகி அதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு படமா என கேள்விகள் எழுந்துள்ளன. அனுராக் கஷ்யப் என்றால் எல்லாமே வித்யாசம் என்பதால் இந்தப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. அக்கட தேசமான ஆந்திராவில் அபயர் என்ற படம் ஒன்று இதே போல உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

போற போக்கப் பார்த்தா தமிழ்லயும் இந்த மாதிரி படங்கள் வந்துவிடும் போலவே....

English summary
Latest News in Bollywood Industry Kabali Fame Actress Radhika Apte to act as Lesbiyan, in Director Anurag Kashyap's Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil