»   »  படம் எடுத்தது போதும்.. ரிட்டயர்ட் ஆகுங்க - ராதிகா ஆப்தே பதிலால் பரபரப்பு!

படம் எடுத்தது போதும்.. ரிட்டயர்ட் ஆகுங்க - ராதிகா ஆப்தே பதிலால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாலாட்டிய நடிகரை ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே!- வீடியோ

மும்பை : நடிகை ராதிகா ஆப்தே, நடிகைகளுக்கு தரப்படும் பாலியல் தொல்லைகள், சினிமாவில் நடிகைகளின் நிலை பற்றி துணிச்சலாக பல கருத்துகளைக் கூறி வருகிறார்.

நேஹா தூபியா நடத்தி வரும் டாக் ஷோ ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா, பல கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய பதில்களைச் சொல்லி பரபரப்பாக்கி இருக்கிறார்.

அப்போது, டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய டைரக்டர் யார் எனும் கேள்விக்கு அவரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய ராம்கோபால் வர்மா பேரையே சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

ராம் கோபால் வர்மா இயக்கிய 'ரக்த சரித்ரா' (தமிழில் ரத்த சரித்திரம்) படத்தில் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு தமிழில் பிரகாஷ்ராஜின் 'தோனி' படத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் கலக்கும் ராதிகா

பாலிவுட்டில் கலக்கும் ராதிகா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'கபாலி' படத்தில் நடித்தது அவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்தது. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடித்து பெயர் வாங்கி வருகிறார் ராதிகா. சமீபத்தில் வெளியான 'பேடு மேன்' படத்திலும் நடித்திருந்தார்.

ராம்கோபால் வர்மா ஓய்வு பெறவேண்டும்

ராம்கோபால் வர்மா ஓய்வு பெறவேண்டும்

சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தேவிடம், டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய டைரக்டர் யார்? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் ராம் கோபால் வர்மா என்று கூறியிருக்கிறார்.

சர்ச்சை

சர்ச்சை

தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்ததே ராம் கோபால் வர்மா தான். அவரையே ஓய்வு பெறச் சொல்லியிருக்கிறார். ராதிகாவின் இந்த பதிலுக்கு என்ன மாதிரியான சர்ச்சையைக் கிளப்பப்போகிறாரோ ராம் கோபால் வர்மா.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இதே நிகழ்ச்சியில், சினிமாவில் பாலியல் தொல்லை பற்றிப் பேசும்போது, தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தென்னிந்திய நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறி பரபரப்பைப் ஏற்படுத்தினார் ராதிகா ஆப்தே.

English summary
Actress Radhika Apte has been boldly telling about casting couch. Radhika asks Ram gopal varma to retire from cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X