»   »  டிசம்பரில் கபாலி குழுவினருடன் இணையும் ராதிகா ஆப்தே

டிசம்பரில் கபாலி குழுவினருடன் இணையும் ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க பா.ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படப்பிடிப்பில் டிசம்பர் முதல் படத்தின் நாயகி ராதிகா ஆப்தே இணைந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Radhika Apte to Join Kabali

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது மலேசியா சென்றிருக்கும் படக்குழுவினர் படத்தின் 75% படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். இந்நிலையில் ராதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை டிசம்பரில் படம்பிடிக்க ரஞ்சித் முடிவு செய்திருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி டிசம்பர் மாதம் ராதிகா ஆப்தே படக்குழுவினருடன் இணைந்து கொள்வார் என்று கூறுகின்றனர். தற்போது ரஜினி மற்றும் தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை ரஞ்சித் படம்பிடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். கபாலி வருகிற தமிழ்ப்புத்தாண்டில் திரைகளைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kabali: Rajini's wife in the film plays the role of Radhika Apte. The scenes involving Radhika, Director Ranjith has decided to shoot in December.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil