»   »  குஞ்சம் குஞ்சம் "டமில்" பேசும் ராதிகாவுக்கு கன்னடா "தும்ப சென்னாகி பருத்தே"!

குஞ்சம் குஞ்சம் "டமில்" பேசும் ராதிகாவுக்கு கன்னடா "தும்ப சென்னாகி பருத்தே"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தமிழ் படங்களில் நடித்தும் மொழி தெரியாத நடிகை ராதிகா ஆப்தே கன்னட மொழியில் சரளமாக பேசுகிறார்.

புனேவை சேர்ந்த நடிகை ராதிகா ஆப்தே இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். வெளிநாட்டவரை திருமணம் செய்துள்ள அவர் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பார்ச்ட் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்து பலரையும் அதிர வைத்தார்.

கபாலி

கபாலி

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்துவிட்டார். அதில் இருந்து குமுதவள்ளியை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

கன்னடம்

கன்னடம்

ராதிகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அண்மையில் பெங்களூர் வந்தார். கன்னட படங்களில் ஏன் நடிக்கவில்லை என்று ராதிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

சாண்டல்வுட்

சாண்டல்வுட்

சாண்டல்வுட்டில் பணிபுரிய தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. அதற்காக கன்னட படங்களில் நடிக்க மாட்டேன் என்று இல்லை. நனகே கன்னடா தும்ப சென்னாகி பருத்தே(எனக்கு கன்னடம் நன்றாகத் தெரியும்) என்று கன்னடத்தில் கூறினார் ராதிகா.

ரஜினி

ரஜினி

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை என்று ராதிகா தெரிவித்தார். ராதிகா தற்போது இந்தி மற்றும் ஆங்கில படங்களில் பிசியாக உள்ளார்.

English summary
Radhika Apte said that though she doesn't have any plans to act in Sandalwood now she knows Kannada very well.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil