»   »  மருத்துவமனையும் வீடுமாக இருக்கும் ரஜினியின் கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே

மருத்துவமனையும் வீடுமாக இருக்கும் ரஜினியின் கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க உள்ள ராதிகா ஆப்தே போபியா என்ற படத்திற்காக மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காளி, மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் போபியா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். போபியா என்றால் எதற்காவது பயப்படுவது என்று அர்த்தம்.


படத்தில் ராதிகா போபியா உள்ளவராக நடிக்கிறார்.


ராதிகா

ராதிகா

ராகினி எம்.எம்.எஸ். படத்தை இயக்கிய பவன் க்ரிப்லானி இயக்குகிறார். படத்தில் போபியா உள்ளவராக நடிக்க இல்லை அந்த கதாபாத்திரமாகவே மாற நினைக்கிறார் ராதிகா.


மருத்துவமனை

மருத்துவமனை

போபியா உள்ளவராக நடிக்க ராதிகா மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுகிறார். மேலும் போபியா உள்ள நோயாளிகளையும் சந்தித்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.


மருத்துவர்கள்

மருத்துவர்கள்

ராதிகா ஆப்தே மனோதத்துவ நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் ஆகியோருடன் தொடர்பில் உள்ளாராம். மருத்துவர்கள் அளிக்கும் தகவல்கள் தனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்கிறார் ராதிகா.


கபாலி

கபாலி

போபியா படத்தை அடுத்து ராதிகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Kabali heroine Radhika Apte is visiting hospitals to do research for her upcoming movie Phobia.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil