»   »  ரஜினியுடன் சண்டைக் காட்சியில் ராதிகா ஆப்தே... கபாலி சுவாரஸ்யங்கள்!

ரஜினியுடன் சண்டைக் காட்சியில் ராதிகா ஆப்தே... கபாலி சுவாரஸ்யங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் சண்டைக் காட்சியில் ராதிகா ஆப்தே நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இப்போது எதையும் சொல்ல முடியாது என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.


பா ரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. தாணு தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங்கில் கலந்துகொண்ட ரஜினி, தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப் படத்துக்காக 5 நாட்கள் டப்பிங்குக்கு ஒதுக்கினார் ரஜினி. இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக நாள் டப்பிங் பேசியது கபாலிக்குத்தான்.


மற்ற நடிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். டப்பிங் பணிகளோடு, டீசர் தயார் செய்யும் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தில் டீசர் இணையத்தில் வெளியாகிறது.


ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

இந்நிலையில், ‘கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, ‘ரஜினிகாந்தைப் போல் யாருமே இல்லை என புகழ்ந்துள்ளார்.


மும்பையில்

மும்பையில்

ராதிகா ஆப்தே நடிப்பில் தயாராகியுள்ள ‘போபியா' இந்திப் படத்தின் டிரைலர் நேற்று மாலை மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற அவரிடம் ‘கபாலி' படத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு செய்தியாளர்கள் கேட்டனர்.


மகிழ்ச்சியான மலேசிய படப்பிடிப்பு

மகிழ்ச்சியான மலேசிய படப்பிடிப்பு

அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, ‘ரஜினி சாருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய உயர்ந்த தருணமாக இருந்தது. குறிப்பாக மலேசியாவில் நடந்த படப்பிடிப்பு மிகவும் நன்றாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் நடித்தது எனது வாழ்வின் மிகவும் சிறந்த அனுபமாகும்.


அற்புதமான மனிதர்

அற்புதமான மனிதர்

ரஜினி சார் மிகவும் அற்புதமான மனிதர். என் அனுபவத்தில் அவரைப்போல் சிறந்த மனிதரை நான் பார்த்ததே இல்லை," எனத் தெரிவித்தார்.


சண்டைக்காட்சி

சண்டைக்காட்சி

இந்தப் படத்தில் ரஜினியுடன் நீங்களும் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 'இருக்கலாம்...இப்போதே எப்படி சொல்ல முடியும். பார்க்கத்தானே போகிறீர்கள்..?' என்றார்.


English summary
Kabali heroine Radgika Apte has praised Rajini as a wonderful person that she ever seen.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil