TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
நான் மும்பையில், கணவர் லண்டனில், எப்படி ஒர்க்அவுட் ஆகுது?: ரகசியம் சொன்ன ராதிகா ஆப்தே
மும்பை: தனது திருமண வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுக்கும், லண்டனை சேர்ந்த இசைக் கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராதிகா மும்பையிலும், டெய்லர் லண்டனிலும் வசித்து வருகிறார்கள்.
டெய்லர் மும்பைக்கு வருவதும், ராதிகா லண்டனுக்கு செல்வதுமாக உள்ளனர். இந்நிலையில் இது குறித்து ராதிகா கூறியிருப்பதாவது,
கணவர்
பக்கத்தில் இருந்தாலும் சரி, தூரத்தில் இருந்தாலும் சரி சண்டைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் வரத்தான் செய்யும். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்துள்ளோம். சண்டை போட்டால் இப்போ உன்னுடன் பேச விரும்பவில்லை என்றோ சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ கூறுவோம்.
பிரச்சனை
சண்டை போட்ட சில நிமிடங்களிலேயே பேசிவிடுவோம். யார் தவறாக இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்போம். சண்டை போட்டுவிட்டு நெடுங்காலம் பேசாமல் இருந்தால் பிரச்சனை தான் பெரிதாகும். நாங்கள் எப்பொழுதுமே சண்டையை மறந்துவிடுவோம்.
முக்கியத்துவம்
எனக்கும், என் கணவருக்கும் இடையே எந்த விதிமுறைகளும் கிடையாது. நீ எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, உனக்கு நான் முக்கியமா இல்லை... என்று கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் ஒரு முறை கூட கூறியதே இல்லை.
ராதிகா ஆப்தே
நானும், பெனடிக்டும் 8 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் தற்போது கூட பலருக்கும் நான் திருமணமானவள் என்பது தெரியாது. நான் ஒன்றும் அதை வேண்டும் என்றே மறைக்கவில்லை. நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொள்கிறோமோ இல்லையோ உண்மையாக இருப்பது முக்கியம் என்கிறார் ராதிகா ஆப்தே.