»   »  பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் பட வாய்ப்பு ஒன்றை பெற தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைக்க முயன்றது பற்றி நடிகை டிஸ்கா சோப்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் சாண்டல்வுட்டில் பட வாய்புக்காக சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்தார்.

இந்நிலையில் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது பற்றி நடிகை ராதிகா ஆப்தேவும் பேசியுள்ளார்.

நடிப்பு

நடிப்பு

நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். நல்ல வேளை எனக்கு அது போன்று எதுவும் நடக்கவில்லை. என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்றார் ராதிகா.

ராதிகா

ராதிகா

தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று தெரிவித்த வேகத்தில் அவர் கூறுகையில், ஒரு முறை தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகர் என் ஹோட்டல் அறைக்கு போன் செய்து கடலை போட்டார். நான் அவரிடம் கடுமையாக பேசினேன். அதன் பிறகு அவர் என்னிடம் சண்டை போட்டார் என்றார்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் ஒருவர் போன் செய்து ஒரு பட வாய்ப்பு தொடர்பாக நீங்கள் ஒரு முக்கிய நபரை சந்திக்க வேண்டும். அவருடன் படுக்கையை பகிர சம்மதமா என்று கேட்டார். நான் சிரித்துவிட்டு முடியாது, என்னுடன் படுக்க விரும்பும் நபர் நரகத்திற்கு செல்லட்டும் என்றேன் என ராதிகா கூறியுள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

பாலிவுட்டில் நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களும் படுக்கையை பகிர அழைக்கப்பட்டுள்ளனர். தான் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் ஒரு ஆண் தனக்கு வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தார் என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Radhika Apte said that she faced casting couch issue in Bollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil