»   »  வெக்கமா இல்ல.. தூக்குல தொங்குங்க!- ராதிகா சரத்குமார்

வெக்கமா இல்ல.. தூக்குல தொங்குங்க!- ராதிகா சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கம் - சத்யம் சினிமாஸ் ஒப்பந்த விவகாரத்தில் உண்மை தெரியாமல் சகட்டு மேனிக்கு சரத்குமார் மீது பழி சுமத்திய 'நண்பர்கள்' தூக்கில் தொங்கட்டும், என்று கடுமையாகச் சாடியுள்ளார் ராதிகா சரத்குமார்.

நடிகர் சங்கக் கட்டடம் கட்ட சத்யம் சினிமாவுடன் சரத்குமார் போட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. சரத்குமார் அணியினர் லஞ்சம் பெற்றுள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும், என்று விஷால், நாசர் உள்ளிட்டோர் குற்றம் சுமத்தினர். இந்த்க குற்றச்சாட்டுதான் தேர்தல் நடக்கவே காரணமாக இருந்தது.

Radhika curses Vishal and team for their wrong allegation

இந்த நிலையில் தேர்தலில் சரத்குமார் அணி தோற்றது. விஷால் அணியினர் அனைத்துப் பொறுப்புகளையும் கைப்பற்றினர்.

இந்த தேர்தல் முடிவு வெளியான 24 மணி நேரத்துக்குள் செய்தியாளர்களை அழைத்த சரத்குமார், சத்யம் சினிமாஸ் ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.

"நானும் ராதாரவியும் சத்யம் சினிமாவுடன் போட்ட ஒப்பந்தத்தைப் பற்றி கண்டபடி விமர்சித்து, பழி சுமத்தியதால், அதை நாங்களே ரத்து செய்து விட்டோம். எங்கள் மீது எந்தக் கறையும் இல்லை. மிஸ்டர் க்ளீனாக நான் வெளியேறுகிறேன்," என்று சரத்குமார் அறிவித்தார்.

இதைப் பாராட்டிய ராதிகா, "பாத்தீங்களா.. வெக்கமா இல்லை உங்களுக்கு. எந்தத் தவறும் செய்யாத சரத்குமாரை எப்படியெல்லாம் பழித்தீர்கள். போய் தூக்கில் தொங்குங்கள் நண்பர்களே," என ட்விட்டரில் கண்டித்துள்ளார்.

English summary
Radhika has scolded Vishal team for their wrong allegations on Sarathkumar in SPI cinema agreement.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil