»   »  மீண்டும் அம்மா ஃபார்முக்கு திரும்பிய ராதிகா!

மீண்டும் அம்மா ஃபார்முக்கு திரும்பிய ராதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில காலம் சினிமாவை விட்டு டிவியில் பிஸியாக இருந்த ராதிகா மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

கோலிவுட்டில் ஒரு செண்டிமெண்ட் உண்டு. ஒருவர் அம்மா கேரக்டர் செய்து அந்த படம் ஹிட் ஆகிவிட்டால் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அம்மாவாக கமிட் செய்வார்கள். அப்படி ராதிகா அம்மாவா நடித்த நானும் ரவுடிதான், தெறி, தர்மதுரை ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் அம்மா வேடமா? ராதிகாவை கூப்பிடுங்க என்ற நிலை வந்திருக்கிறது.

Radhika is busy Amma in Kollywood

சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் எஸ்3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு அம்மாவாகவும், சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாகவும் நடித்துவருகிறார் ராதிகா. இதுதவிர சுமார் அரை டஜன் படங்கள் ராதிகா கால்ஷீட்டுக்காக வெய்ட்டிங்!

இதனால் அம்மா வேடங்களில் கலக்கி வந்த சரண்யா பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், நதியா ஆகியோருக்குதான் வாய்ப்புகள் இல்லை.

English summary
Radhika is bcoming the busy mom in Kollywood after continues hits like Theri, Dharmadurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil