»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

இயற்கை படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையிலும் ராதிகாவுக்கு அடுத்த சான்ஸ் கிடைத்துவிட்டது.

ஸ்ரீகாந்துடன் வர்ணஜாலம் என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இன்னொரு ஹீரோயினாக ஜெயம்படத்தில் நடித்த சதா நடிக்கிறார். இதில் நடிப்புக்கு சதா, கவர்ச்சிக்கு ராதிகா எனறு சொல்லியேசேர்த்திருக்கிறார்களாம்.

ராதிகாவும் புகுந்து விளையாடி வருகிறார் என்கிறார்கள். நகுலன் பொன்னுசாமி இயக்கும் இந்தப் படத்தில் சூட்டிங்ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து கொணடுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் சதா மற்றும் அவரது தந்தையின்அடாவடித்தனங்கள் அதிகமாக இருப்பதாக புகார் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் மிக அழகாக ஒத்துழைப்பதாக ராதிகாவுக்கு புகழ் பாடுகிறார்கள்.

இந்தப் படம் தவிர மேலும் ஒரு படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கியிருக்கும் ராதிகா, இயற்கை படத்தில்நடித்தபோது அந்தமானில் மாங்குரோவ் காட்டில் சேற்றில் சிக்கிக் கொண்டதை சிலிர்ப்புடன் கூறுகிறார்.

புதை குழியில் மூழ்க ஆரம்பித்த பயத்தில் மயங்கிவிட்ட தன்னை, ஹீரோ ஷாம் தான் கயிற்கைக் கட்டி வெளியேஇழுத்துக் காப்பாற்றினார் என்கிறார்.

இதற்கிடையே தீபாவளிக்கு இயற்கை படம் வெளிவருவது சந்தேகமாகியுள்ளது. படத்தை வெளிநாட்டுடிஸ்டிபியூட்டர்களுக்கு விற்றதில் ஏதோ சிக்கலாம். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil