»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயற்கை படத்தின் மூலம் தமிழுக்கு வந்த ராதிகா ஏற்கனவே 10 கன்னடப் படங்களில் நடித்தவர். அங்கு முன்னணிஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

ஆனால், முன்னணி நடிகருக்கே சில லட்சம் தான் சம்பளம் என்பதால் இவருக்குஊதியம் மிகக் குறைவாகவே கொடுத்து வந்தார்கள்.

இதனால் அதிக சம்பளம் கிடைக்கும் தெலுங்கிலும் தமிழிலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்தமுயற்சி இயற்கை மூலம் வென்றது.

இப் படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த ராதிகா, படம்வெளியாகும் வரை வேறு படங்களில் நடிக்க மறுத்து வந்தார்.

ஆனால் படம் வெளிவந்து நல்ல பெயரை வாங்கினாலும் எதிர்பார்த்த அளவு ஓடாததால் வாய்ப்புகள் ஏதும்வரவில்லை.

இதனால் துவண்டு கிடந்த ராதிகா பெங்களூருக்கே திரும்பி மீண்டும் கன்னட படங்களில் சான்ஸ் தேடும்வேலையில் இறங்கியுள்ளார். இந் நிலையில், இயக்குநர் சேகரின் உதவியாளர் வைரமணி இயக்கும் ஒரு புதியபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்ட ராதிகா, இந்தப் படமாவது தன்னை தமிழில் நிலை நிறுத்தும் என்றநம்பிக்கையுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு சில வாரங்களில் தொடங்கப் போகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil