»   »  ரொம்ப அவசரம், சொல்லித் தரியா?: குஷ்புவிடம் கேட்ட ராதிகா

ரொம்ப அவசரம், சொல்லித் தரியா?: குஷ்புவிடம் கேட்ட ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு விஷயத்தை அவசரமாக சொல்லிக் கொடுக்குமாறு குஷ்புவிடம் கேட்டுள்ளார் ராதிகா சரத்குமார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். காலையில் எழுந்த உடன் குட் மார்னிங் சொல்பவர், நாட்டு நடப்பை பற்றி பேசிவிட்டு, இரவில் குட் நைட் சொல்லி ட்வீட்டிவிட்டு தான் தூங்கச் செல்வார்.

இதற்கிடையே தன்னுடைய செல்ஃபிக்கள், குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார்.

இன்றைய செல்ஃபி

குஷ்பு இன்று ஒரு செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த செல்ஃபியில் அவர் அழகாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் ராதிகா சரத்குமார்.

ராதிகா

செல்ஃபி எடுப்பதில் நீ மட்டும் தான் குஷ் சூப்பர், செல்ஃபி பாடம் அவசரமாக தேவைப்படுகிறது என்று ராதிகா சரத்குமார் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குஷ்பு

குஷ்பு

ட்விட்டரில் குஷ்பு தன்னிடம் நல்லபடியாக பேசுபவர்களிடம் நல்லவிதமாக பேசுவார். தேவையில்லாமல் வம்பிழுத்தால் கண்டுகொள்ள மாட்டார். ஓவராகப் போனால் பதிலடி கொடுப்பார்.

அரசியல்

தமிழக அரசியல், தேசிய அரசியல் வரை ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் குஷ்பு. பிரதமர் மோடியின் ட்வீட்டுகளை பார்த்து அவரிடமே கேள்விகளும் கேட்டு வருகிறார்.

English summary
Actress Radhika Sarathkumar wants urgent selfie lessons from good friend Khushbu Sundar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil