»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் அடுத்த நடிகை ராதிகா. இயற்கை என்ற படத்தில் நடித்து வருகிறார்.ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் பார்க்க மிக இளமையாக இருப்பதால் கன்னடத்தில் முன்னணி இளம்ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

பிரேம கைதி, நினகாகி, தவறிகே பா தங்கி போன்ற இவர் நடித்த கன்னடப் படங்கள் வெற்றியடைந்துவிட்டதால்அங்கு முன்னணியில் இருக்கிறார். இந் நிலையில் இவரை தமிழுக்கு இழுத்து வந்துள்ளனர்.

இயற்கை படத்தில் கவர்ச்சியைக் கொட்டியிருக்கும் ராதிகாவின் உண்மைக் கதையைக் கூட ஒரு படமா எடுக்கலாம்.அவ்வளவு பரபரப்புகள் உள்ளன. இதோ ராதிகாவின் பிளாஷ்-பேக்:

மங்களூரைச் சேர்ந்த ராதிகா 14 வயதானபோதே ரதன் (அவருக்கு வயது26) என்பவரைக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறியவர். இருவரும் சேர்ந்தே வாழ்ந்தனர். பின்னர் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்துக்காக இவரது வயது 19 என்று காட்டப்பட்டது. ஆனால், தன் மகள் மைனர் என்பதால் இந்தத்திருமணம் செல்லாது என பிரச்சனை செய்தார் ராதிகாவின் தந்தை. இதை ரதன் எதிர்க்க விவகாரம் முற்றிதந்தையுடன் கணவரை விட்டுப் பிரிந்தார் ராதிகா.

இந் நிலையில் சினிமாவுக்கு வந்தார் ராதிகா. தன்னுடன் முதல் படத்தில் நடித்த ஆதர்ஷ் என்பவருடன் இவர்நெருங்கிப் பழகவே கணவருக்கும் இவருக்கும் தகராறு வந்தது.

இதற்கிடையே தனது மருமகளை தங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ரதனின் தந்தை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். ஆனால்,திருமணத்தின்போது ராதிகா மைனர் என்பதால் இத் திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.

இந் நிலையில் திடீரென ஒருநாள் முன்னாள் கணவர் நிதின் மர்மமாய் இறந்தார். ஹார்ட் அட்டாக் என்று காரணம்சொல்லப்பட்டது. இவர்களுக்கு குழந்தை இருப்பதாகக் கூட சொல்லப்படுகிறது.

இவ்வளவு நடந்தும் கூட ஆதர்சுடன் ராதிகாவின் காதல் தொடர்ந்து கொண்டு தான் உள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பரபரப்புகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இவர் நடித்த 4 படங்களுமே வெற்றி பெற்றதால்இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் வாய்ப்பு கிடைத்தவுடன் சில கன்னட படங்களைக் கூட ஒதுக்கிவிட்டுஒத்துக் கொண்டுவிட்டார்.

காரணம் கன்னடத்தில் ஒரு படத்துக்கு ரூ. 5 லட்சம் கிடைப்பதே அரிது. தமிழில் மட்டும் ஹிட் ஆகிவிட்டால் ரூ. 25லட்சம் கூட சாதாரணமாகிவிடும் என்பதால் தான்.

இவரிடம் கவர்ச்சியைப் பிழிந்தெடுப்பதில் அதிக கவனம் காட்டி வருகிறது இயற்கை படத்தின் யூனிட். ஏற்கனவேநம்மிடம் ராதிகா இருப்பதால் இவரது பெயரை குட்டி ராதிகா என்று மாற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் ஜனா.விரைவில் நல்ல நாமகரணம் சூட்டப்படுமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil