»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

குட்டி ராதிகாவும் துணிந்து விட்டார்...

கேரள, கர்நாடக மாநிலங்களில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், அந்த படங்களில் நடித்த கதாநாயகிகளுக்குஅடுத்து தமிழ் அல்லது தெலுங்கு படங்களில் நடிப்பதுதான் குறியாக இருக்கும். காரணம் லட்சம் லட்சமாக சம்பளம்கொடுப்பது இங்குதான்.

அப்படி அண்டை மாநிலத்துக்குச் சென்று கலைச்சேவை(?) புரிய திட்டமிடுபவர்கள் தெலுங்கை விட அதிகம்நாடுவது தமிழைத்தான். ஆந்திரப் பக்கம் போனால், கட்டியிருக்கிற சேலையை 8 துண்டுகளாக்கி அவற்றை 8டிரஸ்களாகத் தைத்து போட்டு வரச் சொல்வார்கள்.

தமிழில் அந்த அளவுக்குப் பிரச்சனையில்லை. ரேவதி, ஸ்னேகா போல் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துவிட்டால், நாகரிகமான உடையில் வலம் வரலாம். படங்கள் தோற்றுவிட்டால்தான் பிரச்சனை. சென்டிமெண்டடைசொல்லி யாரும் சீண்ட மாட்டார்கள். அதே நிலை தான் ராதிகாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

இயற்கை, வர்ணஜாலம் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியதால் அவரிடம் பெரிய மாற்றம். கவர்ச்சியாகநடிக்க மாட்டேன் என்பது, துணைக்கு அப்பாவை சூட்டிங்குக்கு அழைத்து வருவதுமாக இருந்த ராதிகா இப்போதுமாறிவிட்டார்.

இப்போதெல்லாம் அப்பாவை சூட்டிங் ஸ்பாட் பக்கமே அண்ட விடுவதில்லை. கூடவே அப்பா இருப்பதால்ராதிகாவோடு தாராளமாக பேச, பழக இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும்அதனால் தான் வாய்ப்புக்கள் குறைந்ததாகவும் அறிவுரை சொல்லப்பட்டதையடுத்து இந்த மாற்றமாம்.

மேலும் கவர்ச்சியில் இறங்கிப் பார்க்கவும் முடிவுக்கு வந்துவிட்ட அவர், தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டும்பேச ஆரம்பித்திருக்கிறார்.

"வாலண்டரியாகவே" எப்படியும் நடிக்கிறேன் என்று வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார். இதற்கு ஏதாவது பலன்கிடைக்கிறதா பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil