For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திடீரென பழனி முருகன் கோவிலுக்கு வந்த ராதிகா சரத்குமார்… கண்களை மூடி மனமுருகி பிரார்த்தனை !

  |

  சென்னை : ராதிகா சரத்குமார் பழனி முருகன் கோவிலிலில் மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

  நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் எனும் அடையாளத்தை எல்லாம் தாண்டி திரைத்துறையில் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராதிகா.

  சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா... கதையை பாதியில் மறந்துட்டாங்களா? சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா... கதையை பாதியில் மறந்துட்டாங்களா?

  பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த ராதிகா, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறிவிட்டார். அனைத்து விதமான கேரக்டர்களில் நடித்துள்ள ராதிகா சின்னத்திரையிலும் தனது அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார்.

  கிழக்கே போகும் ரயில்

  கிழக்கே போகும் ரயில்

  ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வந்தபோது அவருக்கு சரியாக தமிழில் கூட பேசத் தெரியது. எல்லாமே நுனி நாக்கு ஆங்கிலம்தான். டயலாக்கைக் கூட ஆங்கிலத்தில்தான் எழுதி வைத்துப் பேசுவாராம். காரணம், லண்டனில் வளர்ந்ததால் அவருக்கு தமிழை விட ஆங்கிலமே நல்லா வருமாம். கோபத்தில திட்டினால் கூட ஆங்கிலத்தில்தான் திட்டித் தீர்ப்பாராம்.

  ஜீன்ஸ்படத்தில் வில்லி

  ஜீன்ஸ்படத்தில் வில்லி

  இப்படிப்பட்ட ராதிகா ஹீரோயினாக, அமைதியான பெண்ணாக, டான்ஸராக, பாடகியாக, சண்டைக் காரியாக என பல அவதாரம் பூண்டுள்ளார் சினிமாவில். ஏன் ஜீன்ஸ் படத்தில் வில்லத்தனமாக கூட அசத்தியிருப்பார். அண்ணிக்கு கோழிவாங்கத் தெரியாது... ஆடு வாங்கத் தெரியாது... ஆன, சோடா வாங்கத் தெரியுமா... என்று பேசும்வசனம் வில்லித்தனத்தில் உச்சத்தில் இருக்கும்.

  சின்னத்திரையில் ராணியாக

  சின்னத்திரையில் ராணியாக

  வெள்ளித்திரையில் ராணியாக வலம் வந்த ராதிகா, சின்னத்திரையிலும் அதே கம்பீரத்துடன் வருகிறார். சின்னத்திரையில் இவர் நடிப்பில் வெளியான சித்தி சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தினமும் இரவு 9.30 மணி ஆகிவிட்டால் அனைவர் விட்டிலும் கண்ணின் மணி கண்ணின் மணி பாடல் ஒளிக்கத் தொடங்கிவிடும். சென்னையில் ஒரு சமயத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்ட போது தெருவில் கூடியிருந்த மக்கள் 9.30 மணி ஆனதும் நிலநடுக்கத்தின் பீதியை மறந்து சித்தி சீரியல் பார்த்த சம்பவத்தை நான் கேள்விபட்டதுண்டு.

  பழனி முருகன் கோவிலில்

  பழனி முருகன் கோவிலில்

  கடந்த வாரம் திரைத்துறையில் நுழைந்து 43 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி குல தெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிணம் செய்தார்.அதே போல தற்போது, பழனி முருகன் கோவிலில் சாமி தரிணம் செய்துள்ளார். பழனி முருகன் எனக்கு பிடித்தமான கடவுள், பழனி முருகன் கோவிலுக்கு செல்வது எனக்கு பிடித்தமான ஒன்று ,மனதுருக வேண்டும் கிடைக்கும் நிம்மதியும், அமைதியும் வேறு எதிலும் கிடைக்காது. அந்த அளவுக்கு நமக்கு மிக மிக நெருக்கமான விஷயம் என்றால் அது முருகனை நினைக்கும்தருணம் என்று புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு கூறியுள்ளார்.

  சிம்புவின் அம்மாவாக

  சிம்புவின் அம்மாவாக

  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.இப்படத்தில் ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். அதேபோல, ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜயின் 33 படத்திலும் நடித்து வருகிறார்.

  ஏராளமான படங்கள்

  ஏராளமான படங்கள்

  கௌதம்வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ள துருவசத்திரம் படத்திலும், அதர்வாவின் குருதி ஆட்டம் படத்திலும், விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்துள்ள அனபெல் விஜய்சேதுபதி படத்திலும், நான்குவழிச்சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

  English summary
  Radikaa Sarathkumar recently had a very special trip. And she had tweeted about it, saying that a visit to Palani Murugan Temple is a always a special one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X