»   »  மதம் பிடிச்ச அழகுக் குதிரை

மதம் பிடிச்ச அழகுக் குதிரை

Subscribe to Oneindia Tamil

ரகசியாவை வைத்து எப்படியெல்லாம் கவர்ச்சி ரசம் பிழிய முடியுமோ அந்த அளவுக்கு பிழிந்தெடுத்து விட்டார்கள் கோலிவுட் இயக்குநர்கள்.

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய் என்ற ஒரே பாட்டின் மூலம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் கும்மாள சுந்தரியாக முன்னணிக்கு வந்து விட்டார் ரகசியா.

பெயரில்தான் ரகசியம். ஆனால் அவரது கிளாமரிலோ ஒளிவு மறைவே கிடையாது. அந்த அளவுக்கு படு வெளிப்படையாக பப்பளக்க ஆட்டம் போட்டு அசத்துகிறார் ரகசியா.

இடையில் கொஞ்ச காலம் சுணங்கிக் கிடந்த ரகசியாவை இப்போது புதுமெருகோடு மீண்டும் ரசிகர்களை விகசிக்க வைக்க கூட்டி வந்துள்ளனர்.

நீ நான் நிலா படத்தில் ரகசியாவின் ரசாபாசமான ஒரு ஆட்டத்தை வைத்துள்ளனர். குட்டியூண்டு டிரஸ்ஸைப் போட்டு விட்டு கிறக்கமான ஒரு ஆட்டத்துக்கு இதில் ஆட விட்டுள்ளனராம்.

தினாவின் இசையில் உருவாகியுள்ள மதம் பிடிச்ச அரபிக் குதிரை என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் காமனின் திருவிழாவை நேரில் பார்த்த திருப்தியைக் கொடுக்குமாம். அந்த அளவுக்கு பாடலில் காம ரசம் பொங்கி வழிகிறதாம்.

பாட்டை விட ரகசியா போட்டுள்ள ஆட்டம்தான் அதிரசமாக இனிக்கிறதாம். பாடல் வரிகளை தூக்கிச் சாப்பிடும் வகையில் எகிறித் திமிறியுள்ளாராம் ரகசியா. பாடலைப் பாடியுள்ளவர், போக்கிரியில் டோலு டோலு கிறக்கமாக பாடி ரசிகர்களை பொங்க வைத்த ரேடியோ மிர்ச்சி புகழ் சுசித்ரா.

சுசித்ராவின் இம்சிக்கும் ஹஸ்கி குரலும், ரகசியாவின் இளமைத் திமிராட்டம் போடும் திணவெடுத்த ஆட்டமும், ரசிகர்களை அலை பாய வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த ஆண்டின் மிகச் சிறந்த மஜா பாடல் என்ற பெருமை இப்பாட்டுக்குக் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil