»   »  எனக்கு இது புடிச்சிருக்கு .. ரகஸ்யா

எனக்கு இது புடிச்சிருக்கு .. ரகஸ்யா

Subscribe to Oneindia Tamil

இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் பேரும், புகழையும்தான் இத்தனை நாட்களாக கனவு கண்டுகொண்டிருந்தேன். இப்போதுதான் அது எனக்குக் கிடைச்சிருக்கு என்கிறார் "சீனாதானா ரகஸ்யா.

துண்டுத் துணிகளை உடம்பில் ஆங்காங்கே போட்டுக் கொண்டு அதிரடி ஆட்டம் ஆடி அசத்திக் கொண்டிருக்கும்ரகஸ்யாவுக்கு "சீனா தானா கும்மாங்குத்து பாடலுக்குப் பிறகு இப்போது கை நிறைய படங்கள். அத்தனையிலும்குறைந்த துணியுடன் கும்மாளம் போட்டு வருகிறார்.

இப்படி அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டுகிறீர்களே, உங்களுக்கே சரியாகப் படுதா என்று ரகஸ்யாவிடம் கேட்டால்,அட, நீங்க வேற, இப்படி ஒரு புகழையும், பேரையும்தான் இத்தனை நாட்களாக கனவு கண்டுகொண்டிருந்தேன்.இப்போது கிடைத்துள்ளது. இதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.

கவர்ச்சி இருப்பதால்தானே காட்டுகிறோம். அதில் என்ன தவறு? ரசிகர்களுக்கு என்னால் முடிந்த அளவுசந்தோஷத்தைத் தர முடிகிறதே, அதுதான் பெரிய விஷயம்....

வெறுமனே கவர்ச்சி காட்டுவது மட்டும் எனது நோக்கமல்லை. அதையும் தாண்டி மாடலிங், பேஷன் எல்லாம்செய்ய வேண்டும். என்னோட ரோல் மாடலான ஜெனீபர் லோபஸைப் போல நானும் பெரிய ஆளாக வரவேண்டும். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, ஓரளவுக்காவது பேசப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்குஎன்று அடுக்கிக் கொண்டே போகிறார் லோபஸ் ... ஸாரி, ரகஸ்யா.

சரி, ரகஸ்யாவுக்கு பாய் பிரண்ட் இருக்கிறார் என்கிறார்களே என்று கேட்டால், தனது இரண்டு விரல்களை குட்டிஉதடுகளில் வைத்து, அதப் பத்தி மட்டும் கேக்கக் கூடாது. நான் ஒரு வார்த்தை சொன்னா அதை நூறுவார்த்தைகளாக்கி எழுதி விடுகிறார்கள். அதனால் எனது பெர்சனல் லைபைப் பத்தி எதையும் சொல்ல மாட்டேன்என்று அக்குனியாகி விடுகிறார் ரகஸ்யா.

கொடுத்து வச்ச குமரன் யாரோ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil