»   »  "அகிரா"... ராய் லட்சுமி அவுட்... சோனாக்‌ஷி இன்!

"அகிரா"... ராய் லட்சுமி அவுட்... சோனாக்‌ஷி இன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முருகதாஸ் இயக்கி வரும் பாலிவுட் படமான அகிராவில் ராய் லட்சுமிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப் பட்டுள்ளதாம். கதையின் முக்கியப் பகுதியே அவரின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு தான் நகர்கிறதாம்.

தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான மௌனகுரு படத்தை இந்தியில் அகிரா என்ற பெயரில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் ஹீரோவைச் சுற்றி பின்னப்பட்ட கதைக்களத்தை இந்தியில் நாயகியைச் சுற்றி மாற்றி அமைத்துள்ளார் முருகதாஸ்.

இப்படத்தில் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார்.

பாலிவுட்டில்...

பாலிவுட்டில்...

இந்தப்படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் நடிகை ராய் லட்சுமி. இவர் தற்போது தமிழில் சவுகார்பேட்டை என்ற பேய்ப்படத்திலும், ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா படத்திலும், பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

முக்கிய கதாபாத்திரம்...

முக்கிய கதாபாத்திரம்...

முதல் இந்திப் படமே முருகதாஸ் இயக்கத்தில் என்பதால் ராய் லட்சுமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அதிலும், அகிரா படத்தில் ராய் லட்சுமியின் கதாபாத்திரம் படத்தில் திருப்புமுனை கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாம்.

ஹேப்பி...

ஹேப்பி...

தென்னிந்தியப் படங்களில் முருகதாஸ் இயக்கத்தில் வாய்ப்பு கிடைக்காத போதும், பாலிவுட்டில் அந்த ஆசை நிறைவேறியுள்ளதாக ராய் லட்சுமி கூறுகிறார். இந்த வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் மேலும் பல கதவுகள் திறந்து விட்டிருக்கிறது என்கிறார் அவர்.

சோனாக்‌ஷி...

சோனாக்‌ஷி...

ஆனால், இப்படத்தில் ஹீரோயினான சோனாக்‌ஷியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ராய் லட்சுமிக்கு கிடைக்கவில்லை. கதைப்படி ராய் லட்சுமியின் கதாபாத்திரம் வெளியேறிய பிறகே, சோனாக்‌ஷியின் கதாபாத்திரம் எண்டர் ஆகிறதாம்.

English summary
Actress Rai Lakshmi making her Bollywood debut with by acting in A.R.Murugadoss's Akira. Sources said that she has been cast for a role which will bring about a twist in the story.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil