»   »  திரும்ப பழைய பெயருக்கு திரும்பிடலாமா? தீவிரமாக யோசிக்கும் ராய் லட்சுமி

திரும்ப பழைய பெயருக்கு திரும்பிடலாமா? தீவிரமாக யோசிக்கும் ராய் லட்சுமி

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

எந்த நேரத்தில் பெயரை மாற்றினாரோ... அதிர்ஷ்டமாக இருக்கும் என்று நினைத்த பெயர் அதன் பின் கொடுத்ததெல்லாம் தோல்விகள்தான். லட்சுமி ராயாக இருந்தபோதுகூட இவ்வளவு அடிகள் வாங்கியதில்லை.

மங்காத்தாவுக்கு பின்னர் தான் நடித்த படங்கள் வரிசையாக மண்ணைக் கவ்வியதால் ஹிந்தி பக்கம் காலெடுத்து வைத்தார் லட்சுமி.

Rai Lakshmi decides to another name change?

அங்கேயும் பெரிய வரவேற்பு இல்லை. முருகதாஸ் இயக்கும் அகிரா படத்தில் சின்ன வேடம் மட்டுமே. அறிமுகமாகும் இன்னொரு படம் போஸ்ட் புரடக்‌ஷனில் இழுத்துக்கொண்டே இருக்கிறது. மீண்டும் தமிழ் பக்கம் திரும்பலாம் என்று தனது ஆஸ்தான இயக்குனர் லாரன்ஸை நாடினார்.

லாரன்ஸ் தான் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடத் தான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'பேர் மாத்துனதுலேருந்துதானே நமக்கு சோதனை ஆரம்பிச்சது... திரும்ப பழைய பேருக்கே போயிடலாமா' என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.

English summary
Due to lack of offers in cinema, Rai Lakshmi is thinking to change her name again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil