»   »  ஓயாத பேயாட்டம்... ராய் லட்சுமிக்கு காலில் ஆபரேஷன்!

ஓயாத பேயாட்டம்... ராய் லட்சுமிக்கு காலில் ஆபரேஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து இடைவிடாத படப்பிடிப்புகளில் பங்கேற்று நடனமாடியதால் நடிகை ராய் லட்சுமிக்கு கால் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு மும்பை மருத்துவமனையில் ஆபரேஷன் நடைபெற்றது.

ராய் லட்சுமி இப்போது சவுகார்பேட்டை என்ற தமிழ்ப் படத்திலும், சர்தார் கப்பார் சிங் மற்றும் ஜாலி ஆகிய தெலுங்குப் படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

Rai Lakshmi undergoes leg surgery

இந்த மூன்று படங்களுக்காகவும் தொடர்ந்து நான்கு நாட்கள் நடனமாடியதால் அவரது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டன. பெரும் வலியால் அவதிப்பட்ட அவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அவருக்கு காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது கால் பிரச்சினை சரியாகிவிட்டது. ஆனால் தொடர்ந்து ஓய்விலிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மும்பை மருத்துவமனையில் இப்போது ஓய்வெடுத்து வருகிறார் ராய் லட்சுமி.

English summary
Actress Rai Lakshmi has underwent a leg surgery at a Mumbai Hospital.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil